செம போதையில் மட்டையான இயக்குனர்… டைரக்சனை கையில் எடுத்த சிவக்குமார்… செம மேட்டரா இருக்கே!!

தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த சிவக்குமார் 1960களில் இருந்து 80கள் வரை பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் சிவக்குமாருக்கென்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது.
சிவக்குமார் ராமாயணம், மஹாபாரதம் போன்ற புராணங்களை அப்படியே மனப்பாடமாக பேசக்கூடியவர். தொடர்ந்து பல மணி நேரம் பேசக்கூடிய திறனும் பெற்றவர். சினிமா ரசிகர்களிடையே ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருந்தார் சிவக்குமார்.
சிவக்குமாரின் இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் சினிமாவின் மேல் அவருக்குள்ள பக்திதான். அந்த அளவுக்கு சினிமாவை தன் உயிர்மூச்சாக நேசித்தவர். இந்த நிலையில் சிவக்குமார் குறித்த சுவாரசிய சம்பவம் ஒன்றை தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது சிவக்குமார் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தில் காலை சூரியன் உதயமாவது போல் ஒரு காட்சியை எடுக்க வேண்டும் என இயக்குனர் திட்டமிட்டிருந்தாராம். ஆதலால் அதிகாலை விடியும் முன்னரே சிவக்குமாரும் படக்குழுவினரும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த இடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால் இயக்குனர் வரவில்லை.
என்னவென்று பார்த்தால் இயக்குனர் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு தனது அறையிலேயே மட்டையாகிவிட்டாராம். இதனை கேள்விப்பட்ட சிவக்குமார் என்ன செய்திருக்கார் தெரியுமா?
உதவி இயக்குனர்களையும், ஒளிப்பதிவாளரையும் அழைத்துக்கொண்டு அந்த காட்சியை அவரே இயக்கியிருக்கிறார். இது குறித்து சித்ரா லட்சுமணன் பேசியபோது “இதுவே வேறு ஒரு நடிகராக இருந்தால் இன்று படப்பிடிப்பு இல்லை என்று நினைத்து அறைக்கு சென்று தூங்கிவிடுவார்கள். ஆனால் சிவக்குமார் அப்படி செய்யவில்லை. இதுபோன்ற அவர் செய்த பல ஆச்சரியத்தக்க செயல்களால்தான் அவருக்கு சினிமாத்துறையில் நல்ல பெயரை பெற்றுத்தந்திருக்கிறது” என கூறியது குறிப்பிடத்தக்கது.