ஒரு பக்கம் சிவாஜி.. ஒரு பக்கம் எம்ஜிஆர்! மாட்டிக் கொண்ட சிவக்குமார்

sivakumar
Sivakumar: சமீபத்தில் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழாவில் சிவக்குமார் பேசியது ஒரு பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்னாடி எந்த நடிகராவது சிக்ஸ் பேக் வச்சிருந்தானா என ஒருமையில் பேசியது தான் இப்போது பெரிய ட்ரோல் ஆகி இருக்கிறது. மகன் பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்கு இப்படியா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே மாதிரி தான் கங்குவா படத்தின் போதும் படத்தைப் பற்றி பெரிய அளவில் பேசி பேசி ஹைப்பை ஏத்தி கடைசியில் அந்த படத்தை பாதாள குழியில் தள்ளியதுதான் மிச்சம்.
அப்படி இருந்தும் சிவக்குமார் ரெட்ரோ பட விழாவிலும் சூர்யா தான் பெஸ்ட் என்பதைப் போல பேசி ஒட்டுமொத்தமாக காலி பண்ணி விட்டார் .இந்த நிலையில் சிவகுமாரை பற்றிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அதைப் பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். கந்தன் கருணை படத்தில் முருகன் வேடம் அணிந்து நடித்திருப்பார் சிவக்குமார் .அந்த படத்தில் வீரபாகு என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.
கந்தன் கருணை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு சிவாஜி ஒரு முக்கிய காரணம் என பல மேடைகளில் சிவக்குமாரே தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில் சிவாஜி பீக்கில் இருந்த நடிகர்,. அப்படி இருக்கும் பொழுது ஒரு வளரும் நடிகராக இருந்த சிவக்குமாருக்காக சிவாஜி நடித்தது எப்பேர்ப்பட்ட விஷயம். அப்படி சூர்யா இப்போது நடிப்பாரா என்பதுதான் என்னுடைய கேள்வி என செய்யாறு பாலு கூறியிருக்கிறார் .
அது மட்டுமல்ல உயர்ந்த உள்ளம் திரைப்படத்திலும் நடித்திருப்பார் சிவக்குமார். அந்த படத்தில் நடிக்கும் பொழுது படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என அக்ரிமெண்ட்டில் கையெழுத்து வாங்கி விட்டாராம். அப்போது எம்ஜிஆர் நடித்த என் அண்ணன் திரைப்படத்தில் தம்பி கதாபாத்திரத்திற்கு சிவகுமாரை கேட்டிருக்கிறார்கள். ஆனால் உயர்ந்த உள்ளம் பட தயாரிப்பாளர் அக்ரீமெண்டில் என்ன இருக்கிறதோ அதன்படி தான் நடக்கும் என கறாராக சொல்லிவிட்டாராம்.
எம்ஜிஆர் நேரடியாக வந்து கேட்டும் அந்த தயாரிப்பாளர் சம்மதம் தெரிவிக்கவே இல்லையாம். அதன் பிறகு தான் சிவகுமார் நடிக்க வேண்டிய கேரக்டரில் முத்துராமன் நடித்திருக்கிறார். ஆனால் வளரும் நடிகராக இருந்த சிவகுமாருக்கு எம்ஜிஆர் பட வாய்ப்பு வந்தும் முடியாமல் போனதே என மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார் .எம்ஜிஆர் உடன் நடிக்கவும் ஆசைப்பட்டிருக்கிறார். இதை அறிந்த எம்ஜிஆர் அடுத்தடுத்து இதயவீணை ,காவல்காரன் போன்ற படங்களில் சிவகுமாரை நடிக்க வைத்தாராம். இப்படி இருந்த சிவக்குமார் ஏன் அந்த மேடையில் அதாவது ரெட்ரோ பட விழாவில் ஒரு இறுமாப்புள்ள மனிதராக நடந்து கொண்டார் என்பதுதான் தெரியவில்லை என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.