Connect with us
sivakumar

Cinema History

சிவாஜிக்கு மட்டும்தனா?.. எனக்கு இல்லையா?.. கலைஞரிடமே சண்டை போட்ட சிவக்குமார்!…

பின்னாளில் தமிழகத்தை ஆண்ட முதலமைச்சராக மாறினாலும் துவக்கத்தில் ஒரு வசனகர்த்தாவாக சினிமாவில் நுழைந்தவர்தான் கலைஞர் கருணாநிதி. இவரை முதன் முதலில் தனது படத்திற்கு பரிந்துரை செய்தவர் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோது கலைஞரின் எழுத்து அவருக்கு தெரிந்திருந்தது.

எனவே, ராஜகுமாரி படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தபோது அப்படத்திற்கு கருணாநிதியை வசனம் எழுத வைக்கலாம் என தயாரிப்பாளரிடம் சொன்னவர் எம்.ஜி.ஆர்தான். மேலும், கருணாநிதிக்கு தந்து கொடுத்து ரயில் மூலம் அவரை கோவை வரவைத்தார். அதோடு, ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று அவரை அழைத்தும் வந்தார்.

இதையும் படிங்க: இவன வச்சி என்ன பண்ணுவ?!.. கலாய்த்த நடிகை!.. வெறியேத்தி வேலை பார்த்த சிவக்குமார்!..

அதன்பின் எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதினார். அதேபோல், சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கு அவர் எழுதிய வசனம் தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டது. ‘இப்படியெல்லாம் வசனம் எழுத முடியுமா?’ என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு பக்கம் பக்கமாக வசனம் எழுதியிருந்தார் கலைஞர்.

அதை அற்புதமாக பேசி நடித்திருந்தார் சிவாஜி கணேசன். இதையெல்லாம் பார்த்து சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகர் சிவக்குமார். கலைஞர் எழுதிய பல வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நடிகர் அவர். கலைஞரின் கதை, வசனத்தில் உருவான பாசப்பறவைகள் படத்தில் நடித்தார் சிவக்குமார்.

parasakthi

பராசக்தி படத்தில் எழுதியது போல தனக்கும் கலைஞர் வசனம் எழுதி கொடுப்பார். நாமும் சிவாஜி போல பேசி நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தார் சிவக்குமார். ஆனால், மிகவும் சின்ன சின்ன வசனங்களை எழுதி இருந்தார் கலைஞர். ஏமாந்துபோன சிவக்குமார் அவரிடம் இதுபற்றி கேட்டப்போது ‘இப்போதெல்லாம் யாருப்பா அந்த மாதிரி வசனத்தையெல்லாம் ரசிக்குறாங்க’ என சொல்லிவிட்டார்.

பாசப்பறவைகள் படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சிவக்குமார் தனது ஆதங்கத்தை சொல்லிவிட்டு ‘இந்த படத்தில் கலைஞர் எனக்கு பெரிய வசனங்களை எழுதிகொடுக்கவில்லை. அதனால் அவர் பராசக்தி படத்தில் எழுதிய வசனத்தை பேசி காட்டுகிறேன் என சொல்லி சிவாஜி பேசிய வசனங்களை பேசினார்.

அவருக்கு பின் மைக்கை பிடித்த கலைஞர் சிவக்குமாரை விட இன்னும் அதிக வசனங்களை சொல்லிக்காட்ட குறுக்கிட்ட சிவக்குமார் ‘சின்ன பையன் கூட நீங்க போட்டி போடலமா?’ எனக்கேட்க, கலைஞரோ ‘சிவாஜிக்கு சொல்லிக் கொடுத்து இந்த வசனங்கள் மனப்பாடமாகிவிட்டது’ என சொல்ல, சிவக்குமாரோ ‘அதுக்காக இந்த வயசுல இப்படி என்கிட்ட மல்லுக்கட்டணுமா?’ என சொல்லி செல்லமாக கோபித்துகொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிவிட்டார்.

இந்த தகவலை சிவக்குமாரே தான் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top