சூர்யாவுக்கு முன்னாடி இத எவன் செஞ்சான்?!.. மீண்டும் வாயை விட்டு ட்ரோலில் சிக்கிய சிவக்குமார்!..

by சிவா |   ( Updated:2025-04-18 20:58:29  )
sivaklumar
X

Retro movie: தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் சூர்யா. நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித் விலக அந்த வேடத்தில் நடிக்க வந்தவர். அதன்பின் சாக்லெட் பாயாக சில படங்களில் நடித்த அவரை நந்தா படம் மூலம் வேறு மாதிரி காட்டினார் இயக்குனர் பாலா. காக்க காக்க படம் மூலம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றினார் கவுதம் மேனன்.

பிதாமகன், சிங்கம், அயன் போன்ற படங்கள் சூர்யாவை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. சூர்யாவின் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் நன்றாக ஓடி அங்கும் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் சூர்யா நிரூபித்து காட்டினார்.

கடைசியாக வெளியான கங்குவா படம் சரியாக போகவில்லை. சூர்யா மீது ஏற்கனவே வன்மத்தில் இருந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முதல் காட்சி வெளியான உடனேயே படம் நன்றாக இல்லை என வன்மத்தை கொட்ட துவங்கினார்கள். இது படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது.

அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படம் ஒரு பீரியட் படம் போல உருவாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், சூர்யாவரின் ரசிகர்களும், அவருடைய அப்பா சிவக்குமார், அம்மா உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சிவக்குமார் ‘வாரணம் ஆயிரம் படத்திற்காக உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் வச்சான் சூர்யா. அதுக்கு முன்னாடி இத எவனாது பண்ணானா?. இல்ல அதுக்கு அப்புறம் எவனாவது பண்ணானா?. கார்த்தி கூட அதை செய்யல’ என பெருமையாக பேசினார். சூர்யாவோ ‘இதெல்லாம் எதுக்கு?’ என்பது போல ரியாக்‌ஷன் காட்டினார். ஏனெனில், இது ட்ரோலில் சிக்கும் என அவருக்கு தெரியும்.

சூர்யாவுக்கு முன்பும், பின்பும் சில நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம் படத்திற்கு முன்பே பொல்லாதவன் படத்திற்காக தனுஷ் சிக்ஸ் பேக் வைத்தார். அதேபோல், சத்யம் படத்திற்காக விஷால் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருந்தார். ஐ படத்திற்காக விக்ரம் வைத்தார். அருண் விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தார்கள். அவ்வளவு ஏன்?. காமெடி நடிகர் சூரி கூட சீமதுரை படத்தில் ஒரு காட்சியில் சிக்ஸ் பேக்கோடு வருவார். இவர்கள் எல்லாவற்றையும் விட காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் பல வருடங்களுக்கு முன்பே 8 பேக் வைத்திருந்தார். இப்படி தமிழ் சினிமாவிலேயே பலரும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள். இது தெரியாமல் சிவக்குமார் பேசியிருப்பது நெட்டிசன்களிடையே ட்ரோலில் சிக்கியிருக்கிறது.

Next Story