சிவக்குமார் ஐயா நீங்க மட்டும் போட்டோ எடுக்கலாமா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரலாகும் புகைப்படம்

by Rohini |   ( Updated:2024-03-03 03:15:15  )
sivakumar
X

sivakumar

Actor Sivakumar: தமிழ் சினிமாவில் என்றும் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்களை போல் ஒரு டாப் நடிகராக இவரால் வரமுடியவில்லை.

கிடைத்த நல்ல நல்ல கதைகளில் நடித்ததன் மூலம் இவருக்கு என ஒரு தனி மார்கெட் உருவானது. ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த சிவக்குமார், அடுத்த தலைமுறை நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராக நடிக்க ஆரம்பித்தார். விஜய், அஜித் இவர்களுக்கு அப்பாவாக ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருப்பார் சிவக்குமார்.

இதையும் படிங்க: ‘ஜோஷ்வா’ படத்தில் நடித்த நடிகை இந்த நடிகரின் மனைவியா? என்ன gvm இதெல்லாம் என்னனு சொல்றது

சிறந்த குணச்சித்திர நடிகராக நடித்தார் சிவக்குமார். நடிப்பையும் தாண்டி யோகா, ஓவியம் வரைதல், சொற்பழிவு ஆற்றுதல் போன்றவைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவக்குமார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்தார் சிவக்குமார்.

இந்த நிலையில் சிவக்குமார் சமீபகாலமாக பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் அனைவரையும் கடுப்படைய வைத்தது. அதாவது அவருடன் செல்ஃபி எடுக்க முற்படும் போது எதிராளியின் செல்போனை வாங்கி தூக்கி எறிவது, சால்வை அணிய போனால் சால்வையை வாங்கி தூர வீசுவது என மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

இதையும் படிங்க: முன்னணி நடிகர்களுடன் காதல் வலையில் சிம்ரன்.. எல்லாமே ப்ரேக் அப்பில் முடிந்த பரிதாபம்…

இது பார்ப்பவர்களை கடுப்படைய வைத்தது. திரைத்துறையில் ஒரு மூத்த நடிகர். அதுவும் பல மேடைகளில் நல்ல நல்ல அறக்கருத்துக்களை கூறி அறிவுரை கூறுபவர் இப்படி நடந்து கொள்ளலாமா என்று கூறி வந்தனர். இதற்கிடையில் சிவக்குமார் சம்பந்தப்பட்ட ஒரு பழைய போட்டோ ஒன்று இன்று வைரலாகி வருகின்றது.

அதில் கார்த்தியையும் சிவக்குமாரையும் சிவக்குமார் அவருடைய வீட்டில் வைத்து போட்டோ எடுக்குற மாதிரியான புகைப்படம். இதை பார்த்த ரசிகர்கள் ‘எதுக்குடா வம்பு. அவரே போட்டு எடுத்து சந்தோஷப்படட்டும். பக்கத்துல போனா குதிப்பாரு. அவர் எடுத்தா மட்டும் இனிக்கும்’ என்றெல்லாம் கூறி சிவக்குமாரை வச்சி செய்து வருகிறார்கள்.

sivakumar

sivakumar

அதுமட்டுமில்லாமல் ஒரு சின்னத்திரை நடிகை செல்ஃபி எடுக்க பின்னாடி இருந்து சிவக்குமார் சிரிக்கும் மாதிரியான புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்து இதுக்கு என்ன அர்த்தம் சிவக்குமார் ஐயா என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:விஜயகாந்த் கொடுத்த ஐடியா… சத்யராஜ் அடித்த லூட்டி… இதுக்குப் பேருதான் லொள்ளா?..

Next Story