சிவாஜி கேட்ட ஒரு கேள்வி!.. நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்த சிவக்குமார்!..எப்படி சினிமாவிற்கு மறுபடியும் வந்தாருனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் நடிக்க தன் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு மிகவும் இளவயதில் புறப்பட்டு வந்தவர் நடிகர் சிவக்குமார். நடிக்க போனால் பெண்களின் அடிமைக்கு ஆளாகி விடுவானோ என்று பயந்த தன் அம்மாவிற்கும் சென்னை போனால் கெட்டுப் போய்விடுவாய் என கூறிய தன் ஆசிரியருக்கும் சத்தியம் செய்து புறப்பட்டிருக்கிறார் சிவக்குமார்.
அங்கு சிவாஜிக்கு வேண்டிய ஒருவரின் உதவியால் முதன் முதலில் பார்த்த படப்பிடிப்பு சிவாஜி நடித்த அன்னையின் ஆணை என்ற படத்தின் படப்பிடிப்பு தான். அந்த படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ஒரு நாள் சிவக்குமாரையும் அவரை அழைத்து வந்தவரையும் தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறார் சிவாஜி. அவர் வீட்டில் ஒரு குட்டி தியேட்டரே இருக்கிறதாம்.
அங்கு அன்னையின் ஆணை படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார் சிவாஜி. அந்த படத்தில் சாம்ராட் அசோகனாக தன் நடிப்பை மிரட்டியிருப்பார். அந்த படத்தில் சிவாஜியிம் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருந்த சிவக்குமாரிடம் நீங்க எப்படி நடிக்க போறீங்களா? இல்லை பொம்மை போட போறீங்களா என்று கேட்டிருக்கிறார் சிவாஜி.
ஒருவேளை அந்த படத்தை போட்டுக் காட்டாமல் இந்த கேள்வி கேட்டால் கூட சிவக்குமார் நடிக்க போகிறேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவர் நடிப்பிற்கு ஈடாகுமா? அந்த படத்தை பார்த்த பிறகு இல்லை நடிக்க வில்லை. படம் போட போகிறேன் என்று கூற ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார் சிவாஜி. அதன் பிறகு சிலகாலம் சிவாஜியை பார்க்கவில்லை என்றாலும் மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு சிவக்குமாருக்கு வர படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஆனால் இருவரும் பார்த்து ஒன்றுமே பேசவே இல்லையாம். அமைதியாக இருந்திருக்கிறார்கள்.