More
Categories: Cinema News latest news

இப்படி ஒரு பூகம்பம் வெடிக்கும்னு எதிர்பார்க்கல! சூர்யா செஞ்ச வேலையால் மிகுந்த மன உளைச்சலில் சிவக்குமார்

Actor Sivakumar:   நல்லொழுக்கத்திற்கு அடையாளமாக இன்றளவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவக்குமார். எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாமல் பெண்களின் காதல் வலையில் விழாமல் தன் பெற்றோரின் பேரை காத்த தமையனாக இருந்து வருகிறார்.

இவர் நடிகராக இருந்த போது சிவக்குமார் மீது ஏராளமான பெண்களுக்கு காதல் வந்திருக்கிறதாம். ஆனால் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து இன்று வரை ஒரு உத்தமனாக இருந்து வருகிறார். என்றும் மார்க்கண்டேயன் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராகவும் திகழ்பவர் சிவக்குமார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பாகுபலி ரேஞ்சில் பார்த்திபன் இயக்க விஜயகாந்த் நடிக்க இருந்த பிரம்மாண்டமான படம்… அப்புறம் என்ன ஆச்சு?

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் சிவக்குமார் குடும்பம் பற்றி சில விஷயங்களை தன் யுடியூப் சேனல் மூலமாக தெரிவித்திருந்தார். அதாவது ஐபிஎல் மாதிரி ஐஎஸ்பிஎல் என்று ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறதாம்.

வெறும் 10 ஓவர்களை கொண்ட அந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்க இருப்பதாகவும் அதில் சென்னை அணியை சூர்யாதான் வாங்கியிருக்கிறதாகவும் தெரிவித்த பயில்வான் ரெங்கநாதன் ஆனால் சூர்யா இந்த அணியை வாங்கியதில் சிவக்குமாருக்கு உடன்பாடே இல்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: சர்ப்பரைஸ் மேல சர்ப்பரைஸ்!.. விடாமுயற்சி படத்தில் ரெண்டு அர்ஜூன்!. அட என்னப்பா சொல்றீங்க!…

ஏனெனில் கிரிக்கெட் விளையாட்டும் ஒரு வித சூதாட்டம் தான் என்று நம்பக் கூடியவர் சிவக்குமார். மது, புகைப்பழக்கம்,சூதாட்டம் என எதிலும் உள்ளே நுழையாத சிவக்குமார், சூர்யா இப்படி உள்ளே இறங்கியிருப்பது அவருக்கு வேதனை அளித்திருப்பதாக பயில்வான் கூறினார்.

ஏற்கனவே காதலித்து ஜோதிகாவை திருமணம் செய்தது  கூட சிவக்குமாருக்கு ஒரு வித மனக்கசப்பை ஏற்படுத்தி அதன் பிறகு சிவக்குமாரை சம்மதிக்க வைத்து இந்த திருமணம் நடந்தது. மேலும் சூர்யா இப்போது சென்னையிலேயே இல்லை. மும்பைவாசியாக மாறி விட்டார். இதுவும் கூட கொஞ்சம் வேதனை தந்திருக்கிறது சிவக்குமாருக்கு. இப்போது இந்த அணியை வாங்கியிருப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை என்று பயில்வான் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

 

Published by
Rohini

Recent Posts