Categories: latest news

சிவராஜ்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ ஜெயிலர் 2 நிலைமை?

கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் சிவராஜ்குமார். அவருக்கு இப்போது உடல்நிலை சரியில்லாததால் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அமெரிக்காவிலேயே தங்கி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதாம். அவருக்கு என்ன ஆனது என்பதை பற்றி இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

ஆனால் உடனடியாக அவருக்கு உண்டான சிகிச்சையை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் அவர் இப்போது அமெரிக்கா சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை கேட்டதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஏனெனில் தற்போது ரஜினி கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அதற்கு அடுத்தபடியாக ஜெயிலர் 2 படத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: Jailer 2: ‘ஜெயிலர் 2’வில் ரஜினியின் லுக் வேற லெவல்ல இருக்க போது… கொடுத்த அப்டேட் அப்படி

அதில் முக்கிய கதாபாத்திரங்களாக சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் ஜெயிலர் 2வில் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜெயிலர் 2வில் எப்படி சிவராஜ் குமார் இணைவார் என்ற ஒரு சந்தேகமும் இப்போது எழுந்திருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் 2 திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவிற்கான ஷூட்டிங் இன்று எடுப்பதாக இருந்தது.

ஆனால் மழை புயல் எச்சரிக்கை காரணமாக அடுத்த வாரம் அந்த ப்ரோமோ சூட்டிங் தள்ளிப் போயிருக்கிறது. ரஜினியின் பிறந்த நாளின் போது ஜெயிலர் 2  படத்தின் ப்ரோமோ வெளியிடப்படும் என ஒரு செய்தி வெளியானது .அதற்கான ப்ரோமோ சூட்டிங் தான் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது அதை டிசம்பர் 4 அல்லது 5 ஆகிய தேதிகளில் எடுப்பதாக திட்டமிட்டு இருக்கிறார்கள் .

இதையும் படிங்க: எதிர்நீச்சல் நடிகர் பேத்தியின் திருமணம்!. அடேங்கப்பா இம்புட்டா!. உடம்பு முழுக்க தங்கம்தான்!

படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கப்பட இருக்கிறதாம். இதற்கிடையில் சிவராஜ் குமார் ஆறு மாதம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் எப்படி ஜெயிலர் 2 படத்தில் கலந்து கொள்வார் என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. இன்னும் சிலர் கூடிய சீக்கிரம் அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வேண்டி வருகின்றனர்.

Rohini

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

25 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

2 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

8 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago