கமல்ஹாசன் மீது ஓவர் பீலிங்கு!.. கன்ட்ரோல் பண்ண முடியாமல் மேடையிலேயே சொன்ன ரஜினி பட நடிகர்!..

by Rohini |   ( Updated:2025-04-17 01:11:44  )
kamal
X

kamal

Kamalhasan: ஒரு வழியாக ஏ ஐ தொழில்நுட்பத்தை நல்லபடியாக அமெரிக்காவில் படித்து முடித்து சமீபத்தில் தான் சென்னைக்கு வந்திருக்கிறார் கமல். இதன்பிறகு தக்லைஃப் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார். தக் லைஃப் படம் வரும் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. அதற்கு முன்பு அதனுடைய முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். ஜிங்குச்சா என ஆரம்பிக்கும் இந்த பாடலை கமல் எழுதி ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த பாடல் ஒரு கல்யாண வைப் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல சிம்பு மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். அது சம்பந்தமான புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தொடர்ந்து இந்த சினிமாவிற்கு புதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறார் கமல். சினிமாவில் ஏதாவது புதுமையை செய்ய வேண்டும், தமிழ் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு போக வேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே ஆசை.

அதை இன்று வரை தொடர்ந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் கமலை பற்றி பிரபல கன்னட நடிகர் கூறிய ஒரு தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .அவர் வேறு யாருமில்லை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் .கமலை பற்றி குறிப்பிடும் பொழுது நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் கண்டிப்பாக கமலை திருமணம் செய்து இருப்பேன் என கூறி இருக்கிறார். கமலை பொருத்தவரைக்கும் அவர் மிக அழகு, அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார்.

சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா ஆகிய இருவரும் நடிக்க இருக்கும் திரைப்படம் 45. அந்த படத்தின் பிரீ ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த மேடையில் கமலை பற்றி கூறியிருந்தார் சிவராஜ் குமார் .முதன் முதலில் என்னை நடிக்க அழைத்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னாலும் நடிக்க முடியுமா என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

ஏனெனில் நடிகர் என்றாலே அழகு இருக்க வேண்டும். அதற்கு மிகப் பொருத்தமானவர்கள் கமல் இன்னொருவர் அமிதாப்பச்சன். அப்படி இருக்கும் இந்த சினிமா துறையில் என்னையும் நடிக்க அழைக்கிறார்களே என நினைத்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். அதன் பிறகு கன்னட படத்தின் மூலமாகத்தான் நான் அறிமுகமானேன் என கமலை பற்றி அவருடைய அனுபவங்களை தெரிவித்து இருந்தார் .தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திலும் சிவராஜ் குமார் பங்கேற்க இருக்கிறார். ஏற்கனவே அந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

Next Story