‘ஜெயிலர்’ படத்தால் மனைவியிடம் அசிங்கப்பட்ட சிவராஜ்குமார்! கேட்டாங்களே ஒரு கேள்வி

by Rohini |   ( Updated:2025-04-18 08:10:07  )
siva
X

siva

கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ,ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ஜாக்கி செரப் போன்ற பலர் நடித்திருந்தனர். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வசூலிலும் சாதனை படைத்தது.

அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் படக்குழு இறங்கினார்கள் .அடுத்தடுத்து ரஜினி வேட்டையன், கூலி ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருந்ததனால் கூலி திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அதைப்போலவே இப்போது கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி பங்கேற்று வருகிறார்.

ஜெயிலர் படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் அதன் இரண்டாம் பாகத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக ஜெயிலர் படத்தில் மாஸ் காட்சிகளாக அமைந்தது ரஜினி, சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் வந்த காட்சிகள் தான் .சிவராஜ் குமார் மோகன்லால் ஆகிய இருவருக்கும் பெரிய அளவில் சீன்கள் இல்லை என்றாலும் அவர்கள் வந்த சீன்கள் திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் சிவராஜ் குமார் படத்தில் நடித்ததை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு சிவராஜ்குமாரின் மனைவி அவரிடம் ‘அப்படி அந்த படத்தில் என்னதான் செய்தீர்கள்? சிகரெட்டை பிடித்தவாறு அந்தப் பக்கம் இந்த பக்கம் நடந்திருப்பீர்கள், டிஷ்யூ பாக்ஸை தூக்கி வீசி இருப்பீர்கள், இதற்கு எவ்வளவு வரவேற்பா’ என கேட்டாராம்.

இதைப்பற்றி சிவராஜ் குமார் கூறும் பொழுது எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாக இருந்தது. சின்ன ரோல் தான். ஆனால் இந்த அளவு வரவேற்பை பெறுமா என நான் நினைக்கவில்லை. ஒரு டிஸ்யூ பாக்ஸ் இந்த அளவு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூட நான் நினைக்கவில்லை .என்னை மாஸாக காட்டியதற்கு கேமராமேனுக்கு மிக்க நன்றி .நான் வரும் சீன்களில் பிஜிஎம்-ஐ போட்டு அசத்திய அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியவர்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.

3:42 PM

78vsankar+91 97877 42602

துரோகம்னா விஷம்... அதிலும் சுருளிராஜனுக்கு அப்படி நடந்தது..! காமெடியாய் சொன்ன வடிவேலு

3:48 PM

Murugan

விஜய் இறங்குனாலே அது ஹிட்டுதான்!.. ஃபிரி புக்கிங்கில் வசூலை குவிக்கும் சச்சின்!...

3:49 PM

78vsankar+91 97877 42602

துரோகம்னா விஷம்... அதிலும் சுருளிராஜனுக்கு அப்படி நடந்தது..! காமெடியாய் சொன்ன வடிவேலு

போட்டாச்சு

3:51 PM

78vsankar+91 97877 42602

அந்த மாதிரி நேரத்துல கூட கோவிலுக்குப் போவேன்... தடலாடியாய் சொன்ன டிவி சீரியல் நடிகை

4:05 PM

விஜயகாந்த் ராவுத்தர் நடத்திய ஹோட்டல்.. அந்த ஹோட்டலின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

4:21 PM

‘ஜெயிலர்’ படத்தால் மனைவியிடம் அசிங்கப்பட்ட சிவராஜ்குமார்! கேட்டாங்களே ஒரு கேள்வி

Next Story