ajith
பல வெற்றிப்படங்களை கொடுத்த தயாரிப்பாளர்:
வான்மதி, கடல்பூக்கள், வெற்றிக்கொடிகட்டு, கண்ணெதிரே தோன்றினாள், காதல் கோட்டை என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்தான் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். தற்போது இவர் படங்களை தயாரிப்பது இல்லை. ஆனால் இன்றைய சினிமாவின் போக்கு ரொம்பவும் மாறிவிட்டதாக மிகவும் வருத்தத்தில் பேசியுள்ளார் சிவசக்தி பாண்டியன். அவர்கள் படம் எடுக்கும் காலத்தில் தமிழ் நாட்டை மட்டும் ஃபோக்கஸ் செய்துதான் படம் எடுத்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது பட்ஜெட் போடும் போதே ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், ஓவர் சீஸ் கடைசியாக தமிழ் நாடு தியேட்டரிக்கல் என்று கொண்டு வருகிறார்கள். இப்படித்தான் பட்ஜெட் போட்டு படம் எடுப்பார்களா என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். அதுவும் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்த பிறகுதான் சினிமாவின் போக்கே மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். யார் வேணும்னா படம் எடுக்கலாம் அப்படினா இதில் என்ன இருக்கிறது.
யார் வேணும்னா படம் எடுக்கலாமா?
அப்படினா பணம் இருக்கிறவன்லாம் படத்தை எடுக்க வேண்டியதுதானே? அதுக்குனு அனுபவம் வேண்டாமா? ஓடிடி சாட்டிலைட் எல்லாம் இறைவன் உங்களுக்கு கொடுத்த பரிசு. ஒரு பாதுகாப்புக்குத்தான். ஒரு வேளை படத்தில் ஏதாவது நஷ்டம் வந்தால் கூட ஓடிடிக்கு விற்று சமன் செய்து கொள்ளத்தான் இருக்கிறது. ஆனால் அதையும் பட்ஜெட்டுக்குள் சேர்த்து அதுவும் ஓடிடி வந்த புதிதில் வேகமெடுக்கவே சம்பந்தமில்லாமல் ஆர்ட்டிஸ்ட் சம்பளத்தை அதிகப்படுத்திவிட்டார்கள்.
என்ன அ நியாயம் பண்றாங்க அந்த ஆர்ட்டிஸ்ட்?மன சாட்சி வேண்டாமா? எங்கிருந்து என்னத்த கொண்டு வந்தீங்க?கடவுள் உங்களுக்கு படைத்த அந்த உருவமும் நேரத்தையும் தான் கொண்டு வந்தீங்க. இதுக்கெல்லாம் அந்த கார்ப்பரேட் கம்பெனிதான் காரணம். லைக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல மனுஷன். எங்கிருந்தோ வந்து படங்களை எடுத்துக்கிட்டு இருந்தாரு.
நடிகர்கள் பண்ற அநியாயம்:
அவரை க்ளோஸ் செய்தது யாரு? இயக்குனரும் நடிகர்களும்தானே. இப்ப யாராவது அந்த கம்பெனிக்கு படம் பண்றேனு சொல்றாங்களா?இதுக்குத்தான் ராம நாராயணன் இருக்கும் போதே நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். கார்ப்பரேட் கம்பெனியை மட்டும் மெம்பர்ஷிம் ஆக்கவே கூடாதுனு சொன்னோம். ஆனால் சன் டிவி நுழைய முற்பட்டபோது ராம நாராயணன் ராஜினாமா செய்ய போறேன்னு சொன்னாரு. அதனால்தான் சன் பிக்சர்ஸ்னு பேரு வச்சு தனியா கொண்டு வந்தோம்.
வயிறு எரியுது சார். இன்றைக்கு எவ்வளவு தயாரிப்பாளர்கள், நல்லா தொழில் தெரிந்த தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. ஆர்ட்டிஸ்ட், இயக்குனர் பண்ற கூத்தை எல்லாம் பார்க்கும் போது. எத்தனை தடவைதான் ரத்தத்தையே பார்க்கிறது? எத்தனை முறைதான் பார்த்த கத்தியேவே பார்க்கிறது?
ஏன் நார்த் மெட்ராஸுனா வெட்டிக்கிட்டுதான் சாவணுமா? நானும் நார்த் மெட்ராஸில்தான் பிறந்தவன். இன்றைக்கு அங்கிருந்துதான் டாக்டர், இன்ஜினியர்னு உருவாகுறான். ஒருத்தன் நல்ல படைப்பை கொடுக்குறான்னா இந்த மாதிரி படத்தை உள்ளே சொருவி அதையும் காலி பண்ணிடுறாங்க என சிவசக்தி பாண்டியன் இன்றைய சினிமா எப்படி இருக்கிறது என்பதை பற்றி வேதனையாக கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…