800க்கும் மேற்பட்ட படங்கள்.. சிவசங்கர் மாஸ்டர் கடந்து வந்த பாதை

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனமைத்தவர் சிவசங்கர் மாஸ்டர். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 88க்கும் அதிகமான படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தனுஷின் திரையுலக துவக்கத்தில் அவருக்கு ஹிட் கொடுத்த ‘மன்மத ராசா’ பாடலுக்கு இவர்தான் நடனமைத்தார். அதன்பின் பல படங்களில் பணிபுரிந்தார். அஜித் நடித்த வரலாறு, சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் கொரொனோவால் பாதிக்கப்பட்டார். அவரின் மகனை தவிர அவரின் குடும்பத்தில் எல்லோருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மாஸ்டரின் நிலமை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் பில் ஏறுவதாலும், குடும்பத்தில் எல்லோருக்கும் சிகிச்சை என்பதாலும் அதிக பணம் தேவைப்பட்டதால் அவரின் குடும்பம் சினிமா பிரபலங்களிடம் உதவி கோரியது.
தமிழ் நடிகர்கள் அமைதியாக இருந்த நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு உதவ முன் வந்தார். அதன்பின் தனுஷும் முன் வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றி இரவு காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவசங்கருக்கு வயது 72. 1975ம் வருடம் முதல் இவர் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில் கூட இவர் நடனம் அமைத்துள்ளார். 30 படங்களில் நடித்துள்ளார். இதில் 4 தெலுங்கு படங்கள் அடக்கம். ராஜமவுலி இயக்கிய மஹதீரா படத்தில் நடனம் அமைத்ததற்காக 2011ம் ஆண்டு தேசிய விருது பெற்றார். மேலும் பூவே உனக்காக,விஸ்வா துளசி, வல்லரசு, உளியின் ஓசை ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.