உயிருக்கு போராடும் பிரபல நடன இயக்குனர் - காப்பாற்றுமா திரையுலகம்?..

தமிழ் சினிமாவில் பல 100 படங்களுக்கு நடனமைத்தவர் சிவசங்கர் மாஸர். தனுஷின் திரையுலக துவக்கத்தில் அவருக்கு ஹிட் கொடுத்த ‘மன்மத ராசா’ பாடலுக்கு இவர்தான் நடனமைத்தார். அதன்பின் பல படங்களில் பணிபுரிந்தார். அஜித் நடித்த வரலாறு, சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொரொனோவால் பாதிக்கப்பட்டார். அவரின் மகனை தவிர அவரின் குடும்பத்தில் எல்லோருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மாஸ்டரின் நிலமை மிகவும் மோசமாக உள்ளதாம். தனியார் மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் பில் ஏறுவதாலும், குடும்பத்தில் எல்லோருக்கும் சிகிச்சை என்பதாலும் அதிக பணம் தேவைப்படுகிறதாம்.
எனவே, அவருக்கு உதவும் படி பிரபல சினிமா பி.ஆ.ஓ நிகில் முருகன் டிவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும். சிவசங்கர் பாபாவின் மகன் அஜய் கிருஷ்ணாவும் உதவி கோரி கோரிக்கை வைத்துள்ளார். உதவி செய்ய விரும்புவர்கள் அவரை தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
திரையுலகினர் அவருக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.