More
Categories: Cinema News latest news

சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்யும் ஆசையில் இருந்த இயக்குனர்- காத்திருந்த அதிர்ச்சி

சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை குறித்து நாம் தனியாக கூறத் தேவையில்லை. தொடக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், அந்த சமயத்திலேயே ரசிகர்களிடையில் மிக பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தார். அதன் பின் அவர் பாண்டிராஜின் “மெரினா” திரைப்படத்தில் அறிமுகமானார்.

தற்போது சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு அடுத்தபடியாக பெரும்பாலான ஃபேமிலி ஆடியன்ஸ்களை தனது கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

Advertising
Advertising

Marina

சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ், அவரை தனது திரைப்படத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்தார். அதே நேரத்தில் இயக்குனர் எழிலும் தனது புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முடிவு செய்தாராம்.

இயக்குனர் எழில், சிவகார்த்திகேயனை “மனம் கொத்தி பறவை” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோது, “சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் திரைப்படம்” என விளம்பரங்கள் கொடுக்கத்தொடங்கிவிட்டாராம். அதன் பின் சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Sivakarthikeyan

இயக்குனர் எழில் அதுவரை நாம்தான் சிவகார்ர்த்திகேயனை தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் என நினைத்துக்கொண்டிருந்தாராம். ஆனால் படப்பிடிப்பின் முதல் நாள் சிவகார்த்திகேயன் இயக்குனர் எழிலிடம் “சார், நான் மெரினா படத்தோட ஷூட்டிங்கை முடிச்சிட்டு வந்துட்டேன்” என கூறியிருக்கிறார். இதை கேட்டதும் எழிலுக்கு ஷாக் ஆகிவிட்டதாம். நாம்தான் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்யப்போகிறோம் என விளம்பரம் கொடுத்துவிட்டோம், ஆனால் அதற்கு முன்பே இவர் மெரினாவில் நடித்துவிட்டு வந்துவிட்டாரே என சற்று கவலையில் ஆழ்ந்தாராம். எனினும் பரவாயில்லை, ஷூட்டிங் போகலாம் என்று முடிவெடுத்து அதன் பின் அந்த படத்தை முடித்திருக்கின்றனர்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் முதன்முதலில் ஹீரோவாக ஒப்பந்தமான திரைப்படம், “மனம் கொத்தி பறவை”-ஆக இருந்தாலும் “மெரினா” திரைப்படமே அவரது முதல் படமாக ஆகிப்போனது.

இதையும் படிங்க: 1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகைக்கா இந்த நிலைமை? – ரஜினியிடம் கையேந்தி நின்ற சம்பவம்

Published by
Arun Prasad

Recent Posts