ஒரு படம் ஹிட்டான உடன் அதேயே ஃபாலோ செய்றீங்களே.?! சிவகார்த்திகேயன் செஞ்சதை பாருங்க…

Published on: June 23, 2022
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. அதனால் அதனை தக்க வைத்துக்கொள்ள அடுத்தடுத்த நகர்வுகளை கட்சிதமாக நகர்த்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதேபோல் அடுத்ததாக அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழி திரைப்படமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்ட் 31 என அறிவிக்கப்பட்டது. இறுதியில் அது மாற்றப்பட்டது.

தற்போது, தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறதாம். அதாவது, டான் திரைப்படம் இப்படித்தான் முதலில் ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் சில காரணங்களால் அந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதனால் அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. டாக்டர் திரைப்படத்திற்கும் கொரோனா காரணமாக இதே கதைதான்.

தற்போது அதே போல் பிரின்ஸ் திரைப்படம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால், நிச்சயம் வெற்றி பெறும் என்று சிவகார்த்திகேயன் தரப்பு நம்புகிறதாம்.

இதையும் படியுங்களேன்  –  யுவன் இசை போர் அடித்துவிட்டதா.?! தொடர்ந்து இளையராஜாவுக்கு குவியும் வாய்ப்புகள்…

அதேபோல சிவகார்த்திகேயன் டிசம்பர் மாதம் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. அதில் டான் திரைப்படம் போல கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஒரு படம் அல்லது ஃபார்முலா ஹிட் ஆனவுடன், மீண்டும் அதையே அப்படியே செய்கிறீர்களே என்று பலரும் சிவகார்த்திகேயனை சிலாகித்துப் பேசி வருகின்றனர். அவருடைய ஃபார்முலா வெற்றி பெறுமா என்பதை அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் ஆனால் தான் தெரியும்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.