தமிழகத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களின் லிஸ்ட்!. விஜய்தான் நம்பர் ஒன்!..

by சிவா |   ( Updated:2025-04-25 02:27:11  )
vijay
X

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் என சொல்லப்படும் தமிழ் திரையுலகில் ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகிறது. ஆனால், எல்லா படங்களுமே வெற்றிப்படங்களாக அமைவது இல்லை. கடந்த வருடம் 1000 படங்கள் வரை வெளியாகியது. அதில் 20 படங்கள் மட்டுமே வசூலை பெற்றதாக சொல்லப்பட்டது. அதாவது ரிலீஸான மொத்த படங்களின் எண்ணிக்கையை கணக்கில் பார்த்தால் 10 சதவீத படங்கள் கூட வெற்றி பெறவில்லை.

தோல்வி என்றால் சின்ன படங்கள் மட்டுமில்லை. பெரிய நடிகர்கள் நடித்து 200 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்படும் படங்களும் தோல்வி அடைந்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுப்பதுண்டு. இப்போது வியாபாரத்தின் எல்லை அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் டிவி, ஆடியோ, ஹிந்தி மொழி உரிமை போன்ற உரிமைகள் மூலம் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் வந்தது.

இப்போது ஓடிடி என்பது வந்துவிட்டது. பெரிய நடிகர்களின் படங்களை 100 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், சமீபகாலமாக அந்த பணத்தை எடுக்க முடியாததால் ஓடிடி நிறுவனங்கள் தங்களின் விலைகளை குறைத்துவிட்டது. ஆனாலும், கணிசமான லாபம் இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது.

கடந்த 2 வருடங்களை கணக்கிட்டால் 6 படங்கள் மட்டுமே தமிழகத்தில் அதிக வசூலை பெற்று வருகிறது. இதில் விஜயே முதலிடத்தில் இருக்கிறார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அவர் நடித்த லியோ படம் தமிழகத்தில் மட்டும் 232 கோடி வசூல் செய்தது. அடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யார் ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவான பொன்னியின் செல்வம் படம் 222 கோடி வசூல் செய்திருந்தது. அதேநேரம் அந்த படத்தின் 2ம் பாகம் பெரிய வசூலை பெறவில்லை.

இதில் 3வது இடத்திலும் விஜயே இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படம் தமிழகத்தில் 219 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் விஜயின் குடும்பம் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் ரசிகர்கள் போல காட்டி கிளைமேக்ஸ் வைத்ததால் வட இந்தியா, கேரளா போன்ற மாநிலங்களில் கோட் படம் அதிக வசூலை பெறவில்லை.

4வது இடத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் இருக்கிறது. பல வருடங்களுக்கு பின் இப்படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. உலகமெங்கும் சேர்த்து 700 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த படம் தமிழகத்தில் 190 கோடி வசூல் செய்தது. 5வது இடத்தில் கமல் வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான விக்ரம் படம் 184 கோடி வரை வசூல் செய்தது. 6வது இடத்தில் அஜித் இருக்கிறார். அவரின் குட் பேட் அக்லி படம் தமிழகத்தில் மட்டும் 172 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்த படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Next Story