Connect with us
banner

சிவகார்த்திகேயன் ஆகாயத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்.! இதுதான் காரணம்.! எஸ்.ஜே.சூர்யா விளக்கம்.!

Cinema News

சிவகார்த்திகேயன் ஆகாயத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்.! இதுதான் காரணம்.! எஸ்.ஜே.சூர்யா விளக்கம்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அதுவும் தொடர்ந்து 100 கோடி கொடுத்த திரைப்படங்களாக மாறிவிட்டன. அதுவும் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கல்லூரி முதல்வராக நடித்திருந்தார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார். சூரி, மிர்ச்சி விஜய், பாலசரவணன் என பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, ‘ தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு ஆகாயம் உண்டு. அதாவது பெரிய பெரிய ஹிட் கொடுத்து இருக்கும் நடிகர்களை அந்த ஆகாயத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள். வெற்றி தோல்வி எல்லாம் கணக்கு கிடையாது. பிறகு அவர்கள் ஆகாயத்தில் இருந்து கொண்டே இருக்கலாம். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் 3 நபர்கள் இருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன் – ஒரே ஒரு படம் தான்.. தளபதி66 தயாரிப்பாளரை மிரள வைத்த சூர்யா.! ஃபாலோ செய்யும் தில் ராஜு.!

அந்த நான்காவது இடம் யார் என்பது இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது. அதில் அவ்வப்போது சிவகார்த்திகேயன் மேலே சென்று விட்டு மறுபடியும் கீழே வருவார். ஆனால் டான் திரைப்படத்திற்கு பிறகு அவர் ஆகாயத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார். அங்கே சேர் போட்டு உட்கார்ந்து கொள்வார்.’ என்று பெருமையாக பேசியிருந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top