லோகேஷ் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, பஹத் பாசில்!. இந்த டிவிஸ்ட் எதிர்பார்க்கவே இல்லையே!..

Published on: June 28, 2024
lokesh
---Advertisement---

ஒரு படம் துவங்கும்போது இவர்தான் தயாரிப்பாளர், இவர்தான் இயக்குனர் என ஒரு டீம் உருவாகும். சில மாதங்கள் வேலைகளும் நடக்கும். ஆனால், அதன்பின் ஏதேனும் ஒரு விஷயம் ஹீரோவுக்கு ஒத்துப்போகவில்லை எனில் எல்லாமே மாறிவிடும். ஒரு தயாரிப்பளர் ஒரு கதையை படமாக எடுக்க ஆசைப்பட்டு ஒரு ஹீரோ, ஒரு இயக்குனர் என்கிற டீமை உருவாக்குவார்.

ஒருவேளை அந்த ஹீரோ கேட்கும் சம்பளத்தை கொடுக்க அந்த தயாரிப்பாளர் கொடுக்க சம்மதிக்கவில்லையெனில், கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த இயக்குனரை அழைத்துகொண்டு தான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க சம்மதிக்கும் தயாரிப்பாளரிடம் போய்விடுவார் அந்த ஹீரோ. கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு முறை விபூதி அடித்திருக்கிறார் ஆர்யா.

இது சினிமாவில் அடிக்கடி நடக்கும். லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் அவரின் நண்பரும், மேயாத மான், ஆடை, குளுகுளு ஆகிய படங்களை இயக்கியவருமான ரத்னகுமார் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

rathna kumar

ஆனால், லியோ பட விழாவில் பேசிய ரத்னகுமார் விஜயை சந்தோஷப்படுத்துவதற்காக ‘கழுகு எவ்வளவு உயரம் பறந்தாலும் கீழே வந்துதான் ஆக வேண்டும்’ என மறைமுகமாக ரஜினியை பேசிவிட்டார். இதனால் ரஜினி ரசிகர்கள் அவரை சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்தனர். இது ராகவா லாரன்ஸுக்கும் கோபத்தை ஏற்படுத்த ‘ரத்னகுமார் இயக்குவதாக இருந்தால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை’ என சொல்லிவிட்டார்.

எனவே, ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணனை இயக்குனராக மாறினார். இந்த படத்திற்கு பென்ஸ் என பெயர் வைக்கப்பட்டு படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பஹத் பாசில் என இருவருமே வில்லனாக நடிக்கவிருக்கிறார்களாம்.

இதில் ஒருவர் என்றாலே சும்மா அதிரும். ரெண்டு பேரும் சேர்ந்தால் அதகளம்தான் என தோன்றுகிறது. இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பால் மலையாளத்தில் பஹத் பாசில் நடிக்கும் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.