More
Categories: Cinema News latest news

கமல் ரேஞ்சுக்கு நடிப்பு வேணும்.. எஸ்.ஜே சூர்யாவுக்கு டெஸ்ட் வைத்த இயக்குனர்!..

1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா.  அதுவரை காதல் நாயகனாக இருந்த அஜித்தை வில்லனாக காட்டி அந்த படத்தை இயக்கியிருப்பார் எஸ்.ஜே சூர்யா. அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாவிற்கு முதன் முதலாக கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசையே இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் இயக்குனரானார்.

Advertising
Advertising

அதன் பிறகு அவர் இயக்கும் திரைப்படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார். அப்படியாக 2004 ஆம் ஆண்டு நியூ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

பயிற்சி கொடுத்த இயக்குனர்:

தற்சமயம் பொம்மை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது படத்தில் தனித்துவமான நடிப்பை எதிர்பார்த்தார் இயக்குனர். குணா படத்தில் கமல்ஹாசன் நடிப்பது போன்ற நடிப்பை அவர் எதிர்பார்த்தார்.

நானும் ப்ரியா பவானி சங்கரும் அப்படியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக முதலில் எங்களுக்கு நடிப்பிற்கு பயிற்சி கொடுத்தார். அதன் பிறகுதான் படத்தில் நடிக்க வைத்தார் என கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை லீக் செய்தவரை வெளுத்துவிட்ட விஜய்… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

Published by
Rajkumar

Recent Posts