Cinema News
கேம்சேஞ்சர் தான் அந்தப் படத்துக்கு ஹைப்!.. என்ன இப்படி சொல்லிட்டாரு எஸ்.ஜே சூர்யா!..
கேம்சேஞ்சர் திரைப்படம் இந்தியன் 3 திரைப்படத்திற்கு நிச்சயம் ஒரு ஹைப்பாக இருக்கும் என்று கூறி இருக்கின்றார் எஸ்.ஜே சூர்யா.
Actor SJ Suriya: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய எஸ்.ஜே சூர்யா. பின்னர் இயக்குனராக பல ஹிட் படங்களை இயக்கி இருக்கின்றார். இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். தற்போது இயக்கத்தை விட்டு விட்டு முழு நேரமும் நடிகராக நடித்து அசத்தி வருகின்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: உங்கள ‘பொண்ணு’ கேட்டு வந்துருக்கோம்… வீட்டுக்கே சென்ற டாப் ஹீரோ
எஸ்.ஜே சூர்யாவிற்கு கௌரவ பட்டம்:
நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு நேற்று வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்ட எஸ்.ஜே சூர்யா என்னுடைய உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைத்த பரிசு. இதனை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியிருந்தார்.
இயக்குனர் அவதாரம்:
எஸ் ஜே சூர்யா கடைசியாக இசை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து முழு நேரமும் நடிகராக மாறிவிட்டார். வில்லன், கேரக்டர் ரோல் என அடுத்தடுத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக ஜொலித்து வருகின்றார். ஒரு படத்திற்கு 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகின்றார். இந்நிலையில் அடுத்ததாக அவர் ஒரு இயக்கப் போவதாக அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்தார்.
இயக்குனர் சங்கரின் கேம்சேஞ்சர்:
நடிகர் எஸ்.ஜே சூர்யா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த எஸ்.ஜே சூர்யா தெரிவித்ததாவது: ‘கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும். அந்த பிளாக்பஸ்டர் ஹிட்டானது இந்தியன் 3 படத்திற்கு ஹைப்பாக இருக்கும். இயக்குனர் சங்கர் ஒரு கடின உழைப்பாளி. அவர் இந்திய சினிமாவிற்கு ஒரு பெருமை. கேம்சேஞ்சர் திரைப்படம் சங்கர் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு கேம்சேஞ்சராக இருக்கும்’ என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஒரு வழியா பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு போலயே!.. மீட்டிங் போட்டு கன்ஃபார்ம் பண்ண இளையராஜா-ரஜினி!
இயக்குனர் சங்கர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்திலும் எஸ் ஜே சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அடுத்ததாக இந்தியன் 3 திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கின்றார். தற்போது கேம்சேஞ்சர் திரைப்படத்தை இந்தியன் 3 திரைப்படத்திற்கு ஹைப் என்று அவர் கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.