டீ குடிக்கிற கேப்ல உருவான ‘வாலி’ பட கதை!.. எஸ்.ஜே.சூர்யாவுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பு...

by சிவா |
ajith vali
X

திரையுலகை பொறுத்தவரை வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம், கோடம்பாக்கத்திலும், சாலிகிராமத்திலும் நடிக்க, படம் இயக்க என வாய்ப்பு தேடி பல ஆயிரம் பேர் சுற்றிவருகின்றனர். எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்துவிடும் என சொல்ல முடியாது. சிலருக்கு வாய்ப்பு கிடைத்தும் சரியாக அதை பயன்படுத்தி கொள்ள மாட்டார்கள்.

சிலருக்கு திடீரென, எதிர்பார்க்காத நேரத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே சினிமாவில் நுழையமுடியும். பலருக்கு பக்கத்தில் வந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் பறிபோய் அதன்பின் வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விடும். இப்படி பல சிக்கல்கள் சினிமாவில் இருக்கிறது. சினிமாவை பொறுத்தவரை எப்போது யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கணிக்கவே முடியாது.

இதையும் படிங்க: இது என்னப்பா புதுப்பிரச்சினையா இருக்கு?.. எந்த வம்புக்கு போகாத மனுஷன்.. மாட்டிக் கொண்டு முழிக்கும் எஸ்.ஜே.சூர்யா..

வாலி படம் மூலம் இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். முதல் காட்சியிலேயே இதுதான் கதை.. இதுதான் கிளைமேக்ஸ் என சொல்லிவிட்டு படத்தை துவங்கியவர் இவர் மட்டுமே. அதன்பின் அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார். சில படங்களில் அப்படி நடித்தார்.

பெரிதாக ஒர்க் அவுட் ஆகாததால் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கிய எஸ்.ஜே.சூர்யா இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். இறைவி, மெர்சல், மாநாடு உள்ளிட்ட சில படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு அஜித் வைத்த காலக்கெடு!.. அது நடக்கலனா நடக்க போவது இதுதான்!..

இவருக்கு முதல் வாய்ப்பு சாதாரணமாக கிடைத்துவிட வில்லை. எஸ்.ஜே.சூர்யாவுக்கு படம் கொடுப்பது என அஜித் முடிவெடுத்தார். தயாரிப்பாளர் சக்ரவர்த்தி, அஜித் எதிரே அமர்ந்திருக்க எஸ்.ஜே.சூர்யா ஒரு கதை சொன்னார். ஆனால், அஜித்துக்கு அது பிடிக்கவில்லை. உடனே ‘டீ குடித்து விட்டு வருகிறேன்’ என சொல்லிவிட்டு வெளியே வந்த வந்த எஸ்.ஜே சூர்யா டீக்கடையில் நின்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அந்த கடையில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த நீரும் நெருப்பும் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு பொறி தட்டியது. உடனே உள்ளேபோய் ஒரு வரியில் ஒரு கதையை சொன்னார். ‘இது நல்லா இருக்கே. டெவலப் பண்ணுங்க’ என அஜித் சொல்ல அப்படி உருவான திரைப்படம்தான் வாலி.

இதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் ஜெயிப்பது என்பது கனவாகவே போய்விடும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: விஜய், அஜித் படம் ஓடாது என நினைத்தேன்… ஆனா நடந்ததே வேற! ஆச்சர்ய தகவலை சொன்ன தேவா!

Next Story