Connect with us
sj suriya

Cinema History

அந்த நடிகருக்கு வில்லனா நடிக்கணும்!.. எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு ஆசையா?!..

எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டு படாதபாடு பட்டு உள்ளே நுழைந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அதில், எல்லாருமே சாதித்தார்களா என்றால் இல்லை. அவற்றில் சிலரின் கதை மட்டுமே வெளியே வந்தது. பலர் வெற்றி பெறமுடியாமல் காணாமல் போனார்கள். சிலர் மட்டுமே நிலைத்து நின்றார்கள்.

அப்படி நின்ற ஒருவர்தான் எஸ்.ஜே.சூர்யா. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு போய் தூரத்திலிருந்து எப்படி படப்பிடிப்பு நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டவர் இவர். அதாவது, இப்போது எஸ்.ஜே.சூர்யா சாப்பிடும் பழத்திற்கான விதை 30 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.

இதையும் படிங்க: அவ்வை சண்முகி படத்துக்கு கமல் அவ்ளோ கஷ்டப்பட்டாரா…? இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே..!

நடிகர் லிவிங்ஸ்டன் நடித்து ஹிட் அடித்த சுந்தரபுருஷன் படத்தில் வேலை செய்தார். ஒருவழியாக இயக்குனர் வஸந்திடம் உதவி இயக்குனராக சேர்ந்து ‘ஆசை’ படத்தில் வேலை செய்தார். அப்படித்தான் அஜித்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த படத்திற்கு பின் சில படங்களில் வேலை செய்த எஸ்.ஜே.சூர்யா ஒரு கதையை உருவாக்கினார்.

அந்த கதையை அஜித்திடம் சொல்லி சம்மதம் வாங்கி வருடக்கணக்கில் படப்பிடிப்பை நடத்தி ஒருவழியாக படத்தை எடுத்து முடித்தார். அப்படி வெளியான படம்தான் வாலி. இந்த படம் ஹிட் அடித்ததும் விஜயை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதுவும் சூப்பர் ஹிட். ஆனால், அப்படத்திற்கு பின் தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

sj suriya

அது சரியாக ஒர்க் அவுட ஆகவில்லை. எனவே, மற்ற ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடிக்க துவங்கினார். அதன் விளைவு, இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக மாறி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரை நடிப்பு அரக்கன் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். மார்க் ஆண்டனி, ஜிதர்தண்டா எக்ஸ் ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ‘மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுப்பீர்களா?’ என்கிற கேள்விக்கு பதில் சொன்ன எஸ்.ஜே.சூர்யா ‘மாதா பிதாக்கு பிறகு எனக்கு அஜித் சார்தான். நான் இப்போது வாழும் வசதியான வாழ்க்கை அவரால் வந்தது. அவரை மீண்டும் இயக்குவதை விட அவர் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என அவர் தெரிவித்தார்.

Continue Reading

More in Cinema History

To Top