
latest news
எஸ்.ஜே.சூர்யாவுக்கு இத்தனை கோடியா?… அதிர்ச்சியான பிரபல முன்னணி நடிகர்கள்…….
வாலி, குஷி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் முழுநேர நடிகராக மாறினார். அவர் இயக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடித்தார்.
தற்போது வில்லனாக அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே, மெர்சல்,நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் நடிப்பில் ஒரு வெப் சீரியஸ் உருவாகவுள்ளது. இந்த வெப் சீரியஸை ஆட்டோ, விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இதுவரை எந்த வெப்சீரியஸுக்கும் இவ்வளவு செலவு செய்ததில்லை என்கிற வகையில் இந்த வெப் சீரியஸ் ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாம். வெப்சீரியஸின் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.10 கோடி செலவு செய்யவுள்ளார்களாம்.
இந்த பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தையே எடுத்துவிடலாம். எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் வெப் தொடருக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா என வாயை பிளக்கிறார்களாம் சக நடிகர்கள்…