வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாநாடு’. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அன்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் வெளியானதால் மாநாடு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் நாளை (நவம்பர் 25) இந்தியாவில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மங்காத்தா படத்தைப்போலவே இப்படத்தின் பிஜிஎம் இசைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள வேடத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அரவிந்த் சாமி தான். அவரிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தால் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்தார்களாம்.
இருவருமே வில்லனாக மிரட்டக்கூடியவர்கள்தான். இந்த கேரக்டரில் அரவிந்த் சாமி நடித்தால் நன்றாக இருக்குமா இல்லையா என்பது படம் வந்த பின்னால்தான் தெரியும்.
