யாஷிகா ஆனந்தா...? பயந்து போய் எஸ்.ஜே.சூர்யா செய்த வேலையை பாருங்க...!
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் அனைவரையும் சமீப காலமாக வெகுவாக கவர்ந்தவர் நடிகரும் இயக்குனருமாகிய
எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக இவர் பணியாற்றி கிடைத்த அங்கீகாரத்தை விட ஒரு நடிகராக இருந்து அதிகமாக பெற்றுக் கொண்டார். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென வில்லன் அவதாரத்தை கையில் எடுத்து அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுமே ஹிட் அடித்து வருகின்றனர். அந்த வகையில் மாநாடு, டான், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். இதில் இவர் நடிப்பை பற்றி தான் அதிகமாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கடமையை செய் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு கோமா நோயாளியாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் சூர்யாவிடம் யாஷிகாவை போடலாம என்று கேட்டதற்கு ஒரு டைப்பா யோசிக்கிறாரே இயக்குனர் என பயந்தாராம்.
அதன் பின் இயக்குனரிடம் சூர்யா சரி. ஆனால் முதலில் ஒரு டெஸ்ட் எடுத்து பாப்போம் என சில வசனங்களை சொல்லசொல்லி கேட்டாராம். கேட்டதும் அசந்துட்டாராம் சூர்யா. அந்த அளவுக்கு மெமரி பவர் இருக்கிற நடிகை. ஒரு ரம்பா, சிம்ரன் போன்ற நடிகைகளை போல வளர்ந்து வருவாய் என மேடையில் வாழ்த்தினார்.