மீண்டும் சைக்கோவாக களம் இறங்கும் எஸ்.ஜே சூர்யா - இதுதானா பொம்மை படத்தின் கதை?
எஸ்.ஜே சூர்யா இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் என்றாலும் தனது தனிப்பட்ட நடிப்பால், தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். ஸ்பைடர் படத்தில் இவர் நடித்த சைக்கோ கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
அதற்கு பிறகு மான்ஸ்டர், மாநாடு, டான் போன்ற படங்களின் மூலம் தனது தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்து அவர் நடித்து வரவுள்ள பொம்மை திரைப்படமும் சைக்கோ த்ரில்லர் கதை என கூறப்படுகிறது. இதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
படத்தின் ட்ரைலர் வந்ததை அடுத்து அதன் கதை இப்படியாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
அதாவது ப்ரியா பவானி சங்கர் ஒரு பொம்மையாம். எஸ்.ஜே சூர்யாவிற்கு இருக்கும் விசித்திரமான வியாதி காரணமாக அவருக்கு அந்த பொம்மை ஒரு பெண்ணாக தெரியுமாம். மேலும் அந்த பொம்மையை தொடுகிற, ரசிக்கிற எவரையும் எஸ்.ஜே சூர்யா கொன்று விடுவாராம். படத்தின் கதை என்னவாக இருக்கும் என தெரியாத பட்சத்தில் இப்படியும் கதை இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.