
Cinema News
எஸ்.ஜே.சூர்யாவிற்கு பதில் இவரா…? நல்ல வேள…படத்தை காப்பாற்றிய இயக்குனர்…!
கடந்தாண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் மாநாடு. எதிர்பார்ப்புகளை மீறி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். நடிகர் எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பார். இந்த நிலையில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில் முதலில் எஸ்.ஜே.சூர்யா சாருக்கு பதிலாக அரவிந்த் சாமி சாரை தான் அணுகினோம்.
இதையும் படிங்கள் : இப்படி காட்டினா ஷாக் அடிக்கும்!…இறக்கி காட்டி அதிர வைத்த இளம் நடிகை
அவரும் சரினு ஒத்துக் கொண்டார். நான் இந்த கதையை எழுதும் போது அரவிந்த் சாமி சாரை நினைத்துக் கொண்டு தான் எழுதினேன். ஆனால் தேதி பிரச்சினையில் அவரால் நடிக்க முடியவில்லை. அதன்பின் தான் எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டோம். அவர் கதையை கேட்டு சரினு சொல்லிட்டார்.
ஆனால் படத்தின் கதைப்படி எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம் மாஸா வில்லனாக காட்டுவதாகும். ஆனால் அவர் நடிக்கும் போது அவரே இப்படி நடிக்கிறேன், என்னுடைய ஸ்டைலும் பண்றேனு சொல்லி நடித்தார். ஆனால் அவரின் நடிப்பினால் தான் படம் ரொம்ப பீக்ல போய் விட்டது. இந்த அளவுக்கு மக்கள் ரசிப்பார்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நினைக்கவில்லை என்று கூறினார்.