சாரி நான் நடிக்க மாட்டேன்!.. ஜிகர்தண்டா 2-வில் நடிக்க மறுத்த எஸ்.ஜே.சூர்யா..

sj suriya: குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். முதல் படமே ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம்தான் ஜிகர்தண்டா.

மதுரையை பின்னணியாக கொண்ட அசால்ட் சேது என்கிற ஒரு ரவுடியை மையமாக வைத்து இக்கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருந்தார். சேதுவை ஹீரோவாக போட்டு படம் எடுப்பதாக சொல்லி அவரை காமெடி பீஸாக மாற்றி படமெடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கும் இயக்குனராக சித்தார்த்த் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனர்..! மரியாதை கொடுக்காமல் சூர்யா செய்த செயல்.. என்னங்க இதெல்லாம்?!

இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதன்பின் பேட்ட, இறைவி, மெர்குரி பூக்கள், ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களை இயக்கினார். இதில், ரஜினி நடித்த பேட்ட படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

அசால்ட் சேதுவுக்கு ஒரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது இப்படத்தின் அடிநாதம். அந்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். அதேபோல், இயக்குனர் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா பிரமாதப்படுத்தியிருந்தார். இந்த படத்தை பார்த்த படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்.

இதையும் படிங்க: இந்த கண்டனங்களுக்கு பின்னால் விஜய் தான் இருக்கிறார்… இருந்தும் இதுமட்டும் போதுமா? பிரபல விமர்சகர் காட்டம்..!

மேலும், எஸ்.ஜே.சூர்யாவை இந்த கால நடிகவேள் என்றும் பாராட்டியிருந்தார். இந்நிலையில், இந்த வேடத்தில் நடிக்க முதலில் எஸ்.ஜே.சூர்யா யோசித்தாராம். பல வருடங்களாக போராடி இயக்குனர் எனும் இமேஜை ரசிகர்களிடம் இப்போதுதான் மாற்றி இருக்கிறேன். இப்போதுதான் என்னை முழு நடிகராக ரசிகர்கள் ஏற்றுகொண்டுள்ளனர். இப்போது நான் இயக்குனராக நடித்தால் சரியா வருமா மீண்டும் என்னை இயக்குனராக பார்க்க துவங்கிவிடுவார்கள். சில நாட்கள் கொடுங்கள் யோசித்துவிட்டு சொல்கிறேன்’ என கார்த்தி சுப்புராஜிடம் சொல்லிவிட்டாராம்.

இதையடுத்து, வேறு நடிகரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து வேலையை துவங்கிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். அதன்பின் தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி அவரே நடிக்க சம்மத்தார் என கார்த்திக் சுப்புராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அச்சச்சோ!.. கங்குவா படத்தால சூர்யாவுக்கு வந்த கண்டம்!.. பதறிப்போன ரசிகர்கள்.. இப்படி ஆகிடுச்சே!..

 

Related Articles

Next Story