திரும்பவும் கசமுசாவா...? இமேஜ் முக்கியம் நண்பா..! தெறித்தோடும் ’டான்’ நடிகர்...
விஜய், அஜித் என இரு மாபெரும் நடிகர்களை அடுத்தடுத்து இயக்கி மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா. வாலி என்ற படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகிறார்.
அதன் பின் குஷி படத்தை விஜயை வைத்து எடுத்து ப்ளாக் பஸ்டர் படமாக கொடுத்தார். அதன் மூலம் முன்னனி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அதன் பின் சில படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். ஆனால் நடித்த படங்கள் எல்லாமே இரட்டை அர்த்தமுள்ளதாகவும் கொஞ்சம் ஆபாசம் கலந்ததாகவும் இருந்தன.
அதனால் மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானார். கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு மெர்சல் படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து மாநாடு, டான் போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் ஏராளமான ரசிகர்களின் அன்பையும் பெற்றார்.
அவர் ஹீரோவாக நடித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லும் படியாக நியூ படத்தில் ஆபாசமான வசனங்களும் அதற்கேற்றாற் போல காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நியூ படத்தை மாதிரி மறுபடியும் எதாவது பார்க்கலாமா? என கேட்க அதற்கு சூர்யா இப்பதான் நல்லவனா இருக்கேன். அந்த இமேஜை கெடுக்க விரும்பல. வேணும்னா நியூ படத்தின் சில கசமுசா காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை எடுக்கலாம் என கூறினார்.