பெண்ணை அடித்து விட்டு ஜெயிலுக்கு போன எஸ்.ஜே.சூர்யா.. கசிந்த ஷாக் தகவல்..
தமிழ் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தனது நியூ படத்திற்கு ஒரு முறை அல்ல இருமுறை சிறை சென்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமாவில் பல வருடம் போராடி வாலி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து, குஷி படத்தினையும் ஹிட் படமாகவே கொடுத்தார். தொடர் வெற்றிகள் அவரை திக்குமுக்காட செய்தது. இங்கு தான் அவரின் பிரச்சனையும் துவங்கியது. அவர் இயக்கத்தில் நியூ படத்தின் கதை தயார் செய்தார்.
இதை தனது முதல் ஹீரோவான அஜித்திடம் கூறி ஓகே வாங்கி விட்டாராம். சிம்ரன் ரோலில் ஜோதிகாவும் ஃபிக்ஸ் செய்யப்பட போட்டோஷூட்கள் முடிந்துவிட்டன. இருந்தும், சில காரணங்களால் அஜித்தால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை தொடர்ந்து, தானே நியூ படத்தில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டார். நாயகனாக படத்தில் எண்ட்ரி கொடுத்தார்.
ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளுடன் இயக்கப்பட்டிருந்த படம் சென்சாருக்கு சென்றது. அதை பார்த்த ஒரு பெண் அதிகாரி, இதற்கு யூவும் இல்லை யூஏவும் இல்லை என்றார். அதுமட்டுமல்லாமல், எஸ்.ஜே சூர்யாவை தரக்குறைவாக ஏகத்துக்கும் பேசி இருக்கிறார். இதில் கடுப்பானவர். கையில் இருந்த செல்போனை அவர் மீது வீசி கோபப்பட்டு இருக்கிறார்.
இதை தொடர்ந்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அதுமட்டுமல்லாமல், இவருக்கும் சிம்ரனுக்கும் நெருக்கமான காட்சி ஒன்று போஸ்டராக சென்னையின் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்த மக்கள் பலர் முகம் சுழிக்க உடனே வழக்கும் போடப்பட்டது. அதற்காக அவர் கைதும் செய்யப்பட்டு ஜாமீனில் வெளியானார். ஆனால், இத்தனை தடைகளை தாண்டி வெளியான படம் வைரல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.