அப்புறம் நடிக்கலாம் முதல்ல அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணுமா!… அதிர்ச்சி தகவலை சொன்ன செய்தியாளர்…

Published on: July 14, 2023
sj surya
---Advertisement---

தமிழ் சினிமாவின் வித்தியாசமான கண்ணோட்டத்தில் படம் இயக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் எஸ்ஜே சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர், ஹீரோ என இரண்டு அவதாரங்களில் ரசிகர்களை மெர்சலாக்கினார். ஆரம்பத்தில் ஒரு வேலை சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டு வறுமைக்கு இடையிலும் திறமையையும், முயற்சியையும் சாணை பிடித்துக்கொண்டே வாய்ப்புகளுக்காக தேடி அலைந்துக்கொண்டிருந்தார். உதவி இயக்குனராக பணியாற்றி படமெடுக்கும் நுணுக்கங்களை அறிந்துக்கொண்டு அதன் பின்னர் சொந்தமாக படம் இயக்க முயற்சித்தார்.

 

sj surya

சிறந்த திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முகம் கொண்டு கோலிவுட்டில் மிகவும் புகழ் பெற்றுள்ளார். இவரது இந்த வளர்ச்சிக்கு விடாமுயற்சி தான் காரணம். ஒரு காலத்தில் போடுவதற்கு செருப்பு கூட இல்லாமல் தேய்ந்து அருந்த்துப்போன செருப்பில் ஊக்கு குத்திக்கொண்டு பசியும் பட்டினியுமாக நடிகர்களிடமும், தயாரிப்பளர்களிடமும் கதை சொல்ல சுற்றித்திரிந்தார். அப்படித்தான் அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார்.

இவரது இயக்கத்தில் வெளியான குஷி , நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. ஹீரோவாக நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் கேரக்டரின் தரத்தை பார்த்து வில்லனாகவும் நடிக்க துவங்கினார். மெர்சல் , மாநாடு, டான், வாரிசு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர், ” எனக்கு நன்கு தெரிந்த நட்பு நடிகையான ஒருவர் எஸ்ஜே சூர்யாவின் ஒரு படத்தில் கமிட்டாகியிருந்தார்.

surya

அப்போது அந்த நடிகை நடிக்க வருவதற்கு முன்னர் ஒரு முறை அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்து வாங்க என இயக்குனரிடம் எஸ்ஜே சூர்யா கேட்டதாகவும் அதற்கு அந்த நடிகை மறுக்கவே வேறு ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வித்தகன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அப்படிப்பட்ட எஸ்ஜே சூர்யாவுடன் தான் பிரியா பவானி ஷங்கர் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போ அவருக்கும் இதே கதி தான் நடந்திருக்குமோ என நீங்கள் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை என அவர் கூறினார். ஆனால், 10 ஆண்டுகளாக ஒரே ஆணை காதலித்துக்கொண்டிருக்கும் பிரியா பவானி ஷங்கர் நிச்சயம் அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கெல்லாம் ஒப்புக்கொண்டிருக்கமாட்டார் எனவும் வித்தகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.