இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக வாலி, குஷி என ஏற்கனவே முத்திரை பதித்த இவர் நடிகராகவும், இறைவி, ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் மிரட்டியிருந்தார். சமீபத்தில் வில்லனாக இவர் நடித்து வெளியான மாநாடு படத்தில் தனது மிரட்டலான நடிப்பில் அனைவரிடமும் பாராட்டை பெற்றிருந்தார்.
இதையடுத்து இவருக்கு புதிய படவாய்போப்புகள் குவிந்து வருகின்றது. தற்போது இவர் கைவசம் 8 புதிய படங்கள் உள்ளன. மாநாடு படத்திற்குப் பின் இவரது மார்க்கெட்டும் எறியுள்ளதால் புதிய கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.
இதற்கிடையே ஒரு புதிய படத்தையும் இயக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இவரிடம் ஒரு கதையை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஷ்கின் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பார் என்றே கூறப்படுகிறது. பொதுவாகவே எஸ்.ஜே.சூர்யா தனது படங்களில் ஹீரோ ரோலுக்கு இணையாகவே வில்லன் ரோலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அந்தவகையில் அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் வில்லன் ரோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஜே.சூர்யாவும், மிஷ்கினும் இணைந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…