எஸ்.ஜே.சூர்யா அரக்கன் தான்… 22 மணி நேரமா செய்வீங்க… ஷாக்கான கோலிவுட்!

SJ Surya: தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து தற்போது வில்லன் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யாவின் வளர்ச்சி பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதிலும் அவரின் சமீபத்திய செயலால் பலரும் வாயை பிளக்க செய்து இருக்கிறார். இதுகுறித்த தகவல் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.
இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா அஜித்தை வைத்து வாலி படத்தினை இயக்கினார். வித்தியாசமான அஜித்தை அப்படத்தில் அப்பட்டமாக காட்டினார். இதனால் படம் ஆஹாஓஹோ ஹிட் அடித்தது. அதில் அஜித்துக்கே ஏகபோக குஷி எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஷூட்டிங் கிளம்பி ராங் ரூட்டில் போய் டிராபிக்கில் சிக்கிய ரஜினி!.. அப்புறம் நடந்துதான் ஹைலைட்!…
அடுத்து விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார். பக்கா லவ் படமான குஷி விஜயின் கேரியரையே வேறு விதத்தில் மாற்றியது. அந்த படமும் மிகப்பெரிய வெற்றி வசூலை பெற்றது. அதற்கடுத்து எஸ்.ஜே.சூர்யா எந்த நடிகரையும் இயக்கவில்லை. தானே நடித்து, அப்படத்தினை இயக்கியும் வந்தார்.
அவரின் நடிப்புக்கு தீனிப்போடும் வகையில் சமீபகாலமாக அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்கள் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அனைத்திலும் ரசிக்கும்படியான நடிப்பையே கொடுத்து இருக்கிறார். அதிலும் மாநாடு படத்தில் அவரின் டயலாக்கிற்கு ரசிகர்கள் தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கவிட்டனர்.
இதையும் படிங்க: கமல் செஞ்சா நானும் செய்யணுமா?!… ஒரு படத்தில் கூட ரஜினி செய்யாத ஒரு விஷயம்…
மாநாடு, மெர்சல் ஆகிய படங்களில் வேறு விதமான வில்லனை பார்க்க முடிந்தது. தற்போது அவர் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனியில் தன்னுடைய நடிப்புக்கு வேறு ஷேட் காட்டி இருக்கிறாராம். அதனுடன் இந்தியன்2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறாராம்.
இதனால் மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் நடக்காமலே இருந்து வந்து இருக்கிறது. படத்தின் ரிலீஸ் நெருங்கி இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக 22 மணி நேரம் டப்பிங் பேசி முடித்து இருக்கிறாராம். அதிலும் மூன்று மாடுலேஷனில் பேச வேண்டுமாம். நடிப்பு அரக்கனு சொல்றதுல தப்பே இல்லப்பா!