Categories: Cinema News latest news

காலம் போன கடைசியில இதெல்லாம் தேவைதானா சார்.?! எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில்….

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக கலக்கி வந்தவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பிறகு இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டத்தொடங்கினார். தொடர்ந்து வில்லனாகவும், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்த கலக்கி தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, டான் ஆகிய படங்கள் ரசிகர் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று எஸ்.ஜே. சூர்யாவுக்கு மார்க்கெட்டை உயர்த்தியது என்று கூறலாம். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், 54 வயதான எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.  இதனையடுத்து, தற்போது அவரது குடும்பத்தினர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு பொண்ணு தேடும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளதாம்.

இதையும் படியுங்களேன்- தனியா வர பயமாக இருக்குதாம்.! சிவகார்த்திகேயனை துணைக்கு அழைத்த அனிருத்.! அப்போ SK நிலைமை.?!

அவரது, குடும்ப வட்டாரத்திலேயே நல்ல பெண் பார்க்கிறார்களாம். திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் கேட்டதற்கு ஸ்.ஜே.சூர்யாவும் சம்மதம் தெரிவித்து உறுதியளித்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் நிச்சயம் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. இதற்கான உண்மை என்னவென்று அவரே அறிவித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Manikandan