Connect with us

Cinema News

லோகேஷ் படத்தில் நடிக்க இருந்த எஸ்.ஜே.சூர்யா… கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட்…

SJ Surya: நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போதைய கோலிவுட்டின் சென்சேஷன் நடிகராகி இருக்கிறார். ஆனால் அவரும் கூட தற்போது மிகப்பெரிய படத்தினை மிஸ் செய்து இருப்பதாக சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இயக்குனராக நல்ல அங்கீகாரம் பெற்றார். இதை தொடர்ந்து விஜயின் குஷி படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கி அவரே நடித்த நியூ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

இதையும் படிங்க: சண்டைக்காட்சியில் நடிக்கும் போது ரஜினிகாந்த் இதை செய்யவே மாட்டாராம்… மூன்றுமுகம் நடந்த அதிர்ச்சி சம்பவம்!…

இதை தொடர்ந்து இயக்கி நடிக்கும் ஆர்வத்தினை வளர்த்து கொண்டார். தொடர்ச்சியாக சில படங்களை இயக்கி நடித்தார். அதை தொடர்ந்து அவருக்கு நிறைய நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தது. லேட்டஸ்டாக அவர் நடிப்பில் ரிலீஸான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் செம வரவேற்பை பெற்றது. 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் படம், ஆதிக் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி, கோட் திரைப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தான் லோகேஷ் கனகராஜ் பேனரில் உருவாக இருக்கும் பென்ஸ் திரைப்படத்தின் வாய்ப்பு வந்ததாம்.

இதையும் படிங்க: அஜித் – ஆதிக் இணையும் படத்திற்கு வில்லனை செலக்ட் செய்த படக்குழு! போரடிக்காம இருந்தா சரி

ஆனால் நிறைய படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் அந்த வாய்ப்பினை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தினை இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top