அஜித்தா? விஜயா? கேட்ட கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன எஸ்.ஜே.சூர்யா – பழச மறக்காத ஆளுனு நிரூபிச்சிட்டாரு

Published on: September 23, 2023
ajith copy
---Advertisement---

Ajith? Vijay? : கோலிவுட்டில் நடிப்பு அரக்கன் என்ற பெயரை எடுத்தவர் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா. உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராகி இப்போது மாபெரும் நடிகராக உருவெடுத்திருக்கிறார். சினிமாவில் நுழைந்ததுமே இருபெரும் துருவங்களாக இருக்கும் விஜய் , அஜித்தை வைத்து மாபெரும் ஹிட்டை கொடுத்தவர்.

எடுத்த இருபடங்களுமே இன்றளவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜித், விஜயின் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் எது என ரசிகர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் லிஸ்ட்டில் வாலியும் குஷியும் கண்டிப்பாக இடம் பெறும்.

இதையும் படிங்க: இளையராஜாதான் வேணும்… கறாராய் சொன்ன ராமராஜன்… படம் ஓடுறதே பெருசு இதுல கண்டிஷன் வேறயா…

அந்த இரு படங்களை இயக்கியதன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் சூர்யா.அதன்பின் பல படங்களை இயக்குவார் என்று எதிர்பார்த்த போது திடீரென ஹீரோவாக மாறி களத்தில் குதித்தார்.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் சர்ச்சைகயில் சிக்கியது. அதன் பின் வில்லனாக புது அவதாரம் எடுத்து இன்று அசைக்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: தொக்கா மாட்னீங்க!. இப்படித்தான் நானும் சிக்கினேன்!. சித்தப்பு சரவணனிடம் சொன்ன ரஜினி…..

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிடம் அஜித்தா ? விஜய்யா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் நேர்மையாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. கண்டிப்பாக அஜித்தான் என்று கூறினார்.

‘ஏனெனில் என்னை நம்பி யார் சார் படம் கொடுப்பார்? ஆனால் அஜித் சார் என்னைத்தேடி வந்து எனக்காக கதை பண்ணுனு வந்து சொன்னார். உதவி இயக்குனராக எவ்வளவு காலம்தான் இருக்கப் போற? நீயும் ஒரு இயக்குனராக மாற வேண்டும்.

இதையும் படிங்க: காசு கொடுத்து பரப்பிய வதந்திகள்… காம் டீச்சரையே கடுப்பாகிய சம்பவம்… அடங்குங்க பாஸ்!

அதனால் என்னை வச்சு ஒரு படம் பண்ணுனு அவர் தேடி வந்தார். அதனால் அவரை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்’ என எஸ்.ஜே.சூர்யா கூறினார். மேலும் தனக்கும் அஜித்துக்கும் உள்ள நெருக்கம் மார்க் ஆண்டனியில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் விஷாலுக்கும் உள்ள நெருக்கம் போலவே இருக்கும் என்றும்,

ஆதிக்கையும் விஷாலையும் பார்க்கும் போதெல்லாம் நானும் அஜித் சாரும் இருக்கிற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்றும் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.