’குஷி’ எடுத்தேன்...! என் வாழ்க்கையில குஷியே இல்லாம போச்சு...! புலம்பும் எஸ்.ஜே.சூர்யா....

வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா. வாலி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வில்லனாகவும் ஹீரோவாகவும் தனது கதாபாத்திரத்தை வெயிட்டா மக்களிடையே கொண்டு போய் சேர்த்திருப்பார்.
வாலி படம் அஜித்தின் கெரியரிலயே மிகவும் முக்கியமான படமாகும் . படமும் வெற்றிகரமாகவும் ஒடியது. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடிப்பில் ‘குஷி’ என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 2000 ஆம் ஆண்டு வெளிவந்த குஷி படம் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல படியாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ஒர் பேட்டியில் குஷி படத்தை பற்றி பேசுகையில் 2000 ஆம் ஆண்டு குஷி படத்தை எடுத்தேன். கிட்டத்தட்ட 22 வருடம் ஆகிவிட்டது. அந்த படத்திற்கு பிறகு தமிழில் வேறெந்த ஹீரோவுடன் சேர்ந்து இன்னும் நான் படம் எடுக்க வில்லை என்று
கூறினார்.
முதல் படம் வாலி, இரண்டாவது படம் குஷி. அதன்பின் எந்த படத்தையும் இயக்கவில்லை என்று கூறினார். ஏனெனில் என்னை நம்பி யாரு பணம் கொடுப்பார்கள் என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதனால் தான் நான் நடிகராக அவதாரம் எடுத்தேன் என தெரிவித்தார்.