எங்க போனாலும் இந்த பொண்ண கூப்டுங்க..கண்டிப்பா படம் ஹிட் தான்..! கொளுத்தி போட்ட எஸ்.ஜே.சூர்யா..
கோலிவுட்டில் விஜய் அஜித் என இரண்டு டாப் நடிகர்களையும் வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. இவர் திரையுலகில் அறிமுகமானது என்னவோ இயக்குனராகத்தான். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகரா இவர் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யாவின் வில்லத்தனத்தை கண்டு ஒட்டுமொத்த திரையுலகும் மிரண்டு விட்டது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
எஸ்.ஜே.சூர்யா தற்போது கடமையை செய் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக நடித்த டான் படத்தில் இவரின் கதாபாத்திரம் அருமையாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரு வெப் சீரிஸ் புரோமோஷனுக்காக சென்றிருந்தார். அங்கு விழாவை தொகுத்து வழங்கியவர் பிரபல தொகுப்பாளினி அஞ்சனா. அப்போது குறுக்கீட்டு பேசிய எஸ்.ஜே.சூர்யா இனிமேல் எந்த பட புரோமோஷனாலும் அஞ்சனாவை தொகுத்து வழங்க சொன்னால் அந்த படம் செம ஹிட் தான். ஏற்கெனவே டான் படத்தின் ஆடியோ லான்சையு இவர் தான் தொகுத்து வழங்கினார். இவர் இப்படி சொல்லும் போது வெட்கத்துடன் சிரிப்பு மழையாக நின்று கொண்டிருந்தார் அஞ்சனா.