சர்தார் 2-ல எஸ்ஜே சூர்யா இப்படி நடிக்கிறாரா?. எப்படி யோசிச்சுருக்காரு பாருங்க டைரக்டர்..

Published on: November 28, 2024
sj suriya
---Advertisement---

சர்தார் 2 திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா சீன உளவாளியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதற்கு முன்பு வெளியான ஜப்பான் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் அடுத்த திரைப்படத்தை எப்படியாவது ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக முனைப்போடு செயல்பட்டு வருகின்றார். தற்போது நடிகர் கார்த்தி தனது ஹிட் படம் ஒன்றின் இரண்டாவது பாகத்தில் தான் நடித்து வருகின்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி, ராசி கண்ணா, ரஸிஷா விஜயன், லைலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படம் சர்தார்.

இதையும் படிங்க: சூட்டிங் வராம தில்லாலங்கடி பண்ணுன கார்த்திக்… வழிக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் செய்த ஐடியா!

இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி சக்க போடு போட்டது. உலகம் முழுவதும் 85 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

sarthar 2
sarthar 2

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் படத்தின் சூட்டிங் தொடங்கி சென்னையில் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் கார்த்தி அவர்களுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்படத்தில் எஸ் ஜே சூர்யா சீன உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவை மேக்கப் போட்டு ஒரு சீனாகாரர்களைப் போலவே மாற்றி இருக்கிறார்களாம். அந்த கெட்டப்பில் நடிகர் எஸ் ஜே சூர்யாவை பார்க்கும் போது புரூஸ்லீ போல் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: வீர தீர சூரன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!.. தமிழ்நாட்டு உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!…

சிறந்த இயக்குனராக பல படங்களை இயக்கி வந்த எஸ் ஜே சூர்யா தற்போது வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படு பிசியாக நடித்து வருகின்றார். தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க இருக்கும் செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.