அந்த படத்தின் இரண்டாம் பாகமா? இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

by Rohini |
அந்த படத்தின் இரண்டாம் பாகமா? இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா
X

#image_title

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இயக்குனராக இரு படங்களில் தன்னுடைய படைப்பு திறமையை காட்டியவர். அதன் பிறகு ஹீரோவாக களம் இறங்கினார் .ஹீரோவாக தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் சொல்லும்படியாக வரவேற்பை தரவில்லை.

அடுத்ததாக வில்லன் அவதாரம் எடுத்து தனக்குள் ஒளிந்திருக்கும் நடிப்பை வெளிப்படுத்தினார். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸாக நடித்து தற்போது வரை அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் வில்லனாகவே தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா.

தமிழ் மட்டுமல்ல தெலுங்கு படங்களிலும் இப்போது ஒரு தேடப்படும் நடிகராகவே மாறியிருக்கிறார். பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக இருப்பார். இந்தியன் 2 படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.

அதனை தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு அவரை கௌரவப்படுத்தியிருக்கிறது வேல்ஸ் கல்லூரி. இந்த நிலையில் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

அதற்கு எஸ் ஜே சூர்யா ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அவர் எடுத்த வாலி மற்றும் குஷி ஆகிய இரு படங்களுமே இன்று வரை ஒரு எவர்கிரீன் படங்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாக அமைந்துவிட்டன. அப்படி ஒரு படைப்பாளியை மீண்டும் எப்பொழுது பார்க்க போகிறோம் என ரசிகர்கள் எஸ் ஜே சூர்யாவிடம் கேட்டு வருகின்றனர்.அ

அதாவது மீண்டும் எப்போது படத்தை இயக்கப் போகிறார் என கேட்டு வந்தனர். அதற்கு இன்று அவர் பதில் அளித்திருக்கிறார் .கேம் சேஞ்சர் ரிலீசுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் ஒரு படத்தை இயக்கப் போகிறேன் என கூறினார். உடனே பத்திரிகையாளர்கள் நியூ படத்தின் இரண்டாம் பாகமா என கேட்டனர். அதற்கு எஸ் ஜே சூர்யா நியூ படத்தின் இரண்டாம் பாகத்தைப் போலவே தான் கில்லர் திரைப்படமும்.அந்த படத்தை தான் ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப் போகிறேன் என பதில் கூறியிருக்கிறார்.

Next Story