ரஜினி நடிக்க வேண்டிய படமே கிடையாது.. கடைசில ரிசல்ட் என்னாச்சு பாருங்க

rajini
50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி. இது அவருடைய பொன்விழா வருடம். சினிமாவிற்கு வந்து 50 ஆண்டை நிறைவு செய்கிறார். இந்த 50 ஆண்டில் அவர் செய்யாத சாதனைகள் இல்லை. அவர் பார்க்காத வெற்றிகள் இல்லை. அவர் பார்க்காத தோல்விகள் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீடித்து இருக்கிறார் ரஜினி.
ஆரம்பத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து பின் இரண்டாவது நாயகனாக நடித்து அதன் பின் ஹீரோவாக மாறியவர். அதுவு பைரவி படம்தான் அவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம். அவரை ஹீரோவாக மாற்றியதே பிரபல சினிமா கதையாசிரியர் கலைஞானம் தான். அந்த ஒரு நன்றிக்கடனுக்காக கலைஞானத்துக்கு ஒரு கோடியில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார் ரஜினி.
அதன் பிறகு அருணாச்சலம் படத்தில் நடித்து அந்தப் படத்தில் வந்த வருமானத்தால் பல பேரை வாழ வைத்தார். இப்படி பல பேருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இந்த நிலையில் எஸ்.ஜே. சூர்யா ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் பேசியது வைரலாகி வருகின்றது. ரஜினி ஒரு உச்ச நிலையை அடைந்த பிறகு அவர் சந்தித்த பெரிய தோல்வி என்றால் அது பாபா படத்தின் தோல்விதான்.
அதில் பல வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தனர். ஆனாலும் அந்த நஷ்டத்தை சரி செய்தார் ரஜினி. அதன் பிறகு கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்துதான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் பெரிய ஹீரோயிசமான படமும் கிடையாது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சந்திரமுகி படத்தில்தான் நடித்தார். அதுவும் படமுழுக்க அவரை தவிற மற்றவர்கள் தான் நடித்தார்கள்.

அவர் சும்மா வந்து வந்து போகிற மாதிரி தான் இருக்கும். ஆனால் கடைசில லக்க லக்க லக்கனு சொல்லி மொத்தமா படத்தை அவர் பக்கம் இழுத்தாரு. சந்திரமுகி படம் அவர் நடிக்க வேண்டிய படமே கிடையாது. நினைத்திருந்தால் என்னால் நடிக்க முடியாதுனு சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என எஸ்.ஜே. சூர்யா அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.