எஸ்.ஜே.சூர்யா முதலில் இயக்குனர் ஆசையில் தான் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் அவர் இயக்கிய அஜீத்தின் வாலி ரொம்பவே சூப்பர்ஹிட் ஆனது. முதல் படத்திலேயே தமிழ்த்திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
Also read: Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!
அப்புறம் அவர் இயக்கிய குஷி படம் விஜய்க்கு மிகப்பெரிய சூப்பர்ஹிட்டைக் கொடுத்தது. இந்த இருபடங்களில் ஒரு சில காட்சிகளில் யாரும் பார்க்காதவகையில் வந்து போய் இருப்பார். ஆனால் அவருக்குள் அதன்பிறகு நடிப்பு ஆசையும் வந்துவிட பல படங்களில் வித்தியாசமான ஒரு நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார். அதன்பிறகு வில்லனாகவும் நடித்து அசத்தினார்.
அதில் குறிப்பிடத்தக்க படங்களாக வியாபாரி, நியூ., அன்பே, ஆருயிரே படங்களைச் சொல்லலாம். இவற்றில் நியூ படம் அசத்தலாக இருக்கும். 2004ல் எஸ்ஜே.சூர்யா கதை எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கிய படம் நியூ. அவருடன் இணைந்து சிம்ரன், மணிவண்ணன், தேவயானி, ஜனகராஜ், கருணாஸ், ஐஸ்வர்யா, கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ‘சர்க்கரை இனிக்குற சர்க்கரை’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இந்தப் படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து நடிகை தேவயானி இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
நியூ படத்துல ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தான் முதலில் சொன்னேன். ஆனால் ‘இல்ல நீங்க கதையை முதலில் கேளுங்க’ என்று சொல்லி பத்து நிமிஷத்துல எஸ்.ஜே.சூர்யா வீட்டுக்கு வந்துட்டார். வீட்டுக்கு வந்துட்டு கதை சொல்லி, இம்ப்ரஸ் பண்ணி, நடிச்சு நடிச்சு காமிச்சாரு.
Also read: Kanguva: புலியை கண்டு சூடுபோட்ட பூனையாய் மாறிய ‘கங்குவா’.. சூர்யாவின் கண்ணீர் வொர்க் அவுட் ஆகுமா?
அதுல நான் இம்ப்ரஸ் ஆகி ‘ஓகே’ சொல்லிட்டேன். தெலுங்குல தான என்று நினைத்துக் கொண்டு பண்ணினேன். தெலுங்கு பார்த்துட்டு அவர் ‘தமிழிலும் நீங்க தான் பண்ணனும்’னு ஒரே அடம். நான் எவ்வளவு சொல்லியுயும் எங்கிட்ட கெஞ்சிக் கேட்டு ஒத்துக்க வச்சிட்டாரு என்கிறார் நடிகை தேவயானி.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…