Categories: Cinema History Cinema News latest news

செய்த தவறை திருத்தி கொண்ட சிவகார்த்திகேயன்.!? வெளியான போட்டோவை நீங்களே பாருங்க…

சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 20வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்து விட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. அதே தேதியில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படமும் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அது மிகவும் சாதாரணமாக இருந்தது. கையில் ஒரு உலக உருண்டை பொம்மையுடன் சிவாகர்திகேயன் புன்னகையுடன் அமர்ந்திருப்பது போல போஸ்டர் அமைந்திருந்தது.

இதையும் படியுங்களேன் – என்ன பெரிய விக்ரம்.. அனிருத்.? ‘அந்த’ சம்பவத்தை யுவன் எப்போவோ செஞ்சிட்டார்.! ஆதாரம் இதோ..

இந்த படத்தின் ஹீரோயின் வெளிநாட்டு ஹீரோயின்.  மரியா ரியாபோஷப்கா (maria ryaboshapka) அவர் கூட இல்லாமல் இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. அதுவும் வித்தியாசமாக எதுவுமே இல்லை என்று விமர்சித்து வந்தனர் பெரிதாக இந்த புகைப்படம் வைரலாக வில்லை.

சிவகார்த்திகேயன் மற்றும் அந்த வெளிநாட்டு ஹீரோயின் மரியா ரியாபோஷப்கா (maria ryaboshapka)  இருக்கின்றன இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நேற்று செய்த தவறை தற்போது திருத்தி பட குழு வெளியிட்டுள்ளது. இந்த இரண்டாவது போஸ்டர் உண்மையில் நன்றாக இருக்கிறது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Published by
Manikandan