அண்ணே...கொஞ்சம் புரட்டி பாருங்க...ராம்சரணை காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்...!
அடுத்தடுத்த தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது கமல் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது ஏற்கெனவே நாம் அறிந்த ஒன்று. டாக்டர், டான் போன்ற தொடர் வெற்றிப் படங்களை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ’ரங்கூன்’ பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் sk-21 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த புதிய படத்திற்கான தலைப்பு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே உதய நிதி ஒரு விழாவில் எஸ்கே-21 மாவீரன் பற்றிய படமாக இருக்கும் என்று பிள்ளையார் சுழி போட்டு கூறினார். அவர் வாய்முகூர்த்தம் பழித்தமாதிரி படத்திற்கு ‘மாவீரன்’ என்றே பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் வரலாற்று பின்னனியில் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரராக நடிக்க இருக்கிறாராம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி வலிமை மிக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இது ஒரு பேன் இந்தியா படமாக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஹரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கெனவே மாவீரன் என்று பெயர் கொண்ட படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்து அந்த படம் பெரும் வெற்றிபெற்றது. மேலும் ரஜினி நடிப்பிலும் மாவீரன் என்ற பெயரில் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது அதே வரிசையில் இன்னொரு படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிறது. இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தலைப்பை மாற்றுங்கள் ஏற்கெனவே மாவீரன் படம் வந்தது உங்களுக்கு தெரியாதா? என்று மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர்.