ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸுக்கு தேதி குறித்த முருகதாஸ்!.. எஸ்.கே.23 பரபர அப்டேட்!…

Published on: November 26, 2024
sivakarthikeyan
---Advertisement---

SK 23: கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஆங்கராக இருந்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். அப்படி வந்த சிலரில் சிவகார்த்திகேயன் மட்டுமே பெரிய இடத்தை பிடித்தார். காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்து குறுகிய காலகட்டத்தில் சீனியர் நடிகர்களை ஓவர்டேக் செய்து முன்னேறினார்.

துவக்கத்தில் இவரின் வளர்ச்சிக்கு நடிகர் தனுஷ் காரணமாக இருந்தார். 3 படத்தில் நடிக்க வைத்ததோடு எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தார். அதன்பின் சில காரணங்களால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி ரிலீஸில் ஏற்பட்ட குழப்பம்!.. நீங்க வரலன்னா என்ன நாங்க வரோம்?!.. ரெடியா இருக்காங்களே!..

ஆனாலும், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் இருவரும் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். இந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஒருபக்கம், தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

ரஜினி, விஜய் படங்கள் செய்யாத சாதனையை அமரன் படம் செய்து காட்டியிருக்கிறது. 3 வாரங்களை கடந்தும் தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படமும் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாகும்.

sk23
#image_title

இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து ஒரு புதிய படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜனவரி 1ம் தேதி புதிய வருட பிறப்பு அன்று வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: 12 வருஷம் ஆச்சி.. மீண்டும் உங்களுடன்!.. விஜயோடு ஒரு மீட்டிங் போட்ட அமரன் பட இயக்குனர்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.