Connect with us

Cinema News

சிவகார்த்திகேயன் ஏன் பெரிய இயக்குனர்களை தவிர்க்கிறார்.?! செம பிளான் SK.!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருபவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரை ரோல் மாடலாக வைத்து தான் தற்போது பல சின்ன திரை பிரபலங்கள் திரைக்கு வருகின்றனர் என்றே கூறலாம்.

தற்போது அவரது மார்க்கெட் விஜய் அஜித்தை அடுத்து இருக்கிறது என்றே கூறலாம். ஒரு உச்ச நட்சத்திரமாக வளர்வதற்கு ஓர் முக்கிய காரணம் குடும்பங்கள், மற்றும் குழந்தைகளை கவர்ந்தாலே போதும். அதனை சிவா பக்காவாக பிடித்துவிட்டார். ரஜினி, விஜய் பாதையை கெட்டியாக பிடித்தும் விட்டார்.

ஆனால், இவர் வளர்ந்து வரும் நேரத்திலும் சரி ,தற்போது ஓர் நல்ல நிலைமையில் இருக்கும் போதும்  சரி, பெரும்பாலும் புதுமுக, அல்லது இளம் இயக்குனர்களுடன் மட்டுமே பயணித்து வருகிறார். பெரிய இயக்குனர்கள் பக்கம் சிவா சென்றதில்லை. வேலைக்காரன் மோகன் ராஜா தவிர.

ஏன் என்று விசாரிக்கையில், அதுவும், விஜய் பார்முலா தான். ஆம், பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்தால் அது அவர் படமாகவே அறிமுகப்படுத்தப்படும். ஷங்கர் திரைப்படம், மணிரத்னம் திரைப்படம், முருகதாஸ் திரைப்படம் என்றே விளம்பரப்படுத்தப்படும்.

 

இதையும் படியுங்களேன் – காண்டம் விற்க தயாரான RRR படக்குழு.! என்ன ராஜமௌலி இதெல்லாம்.?!

அதுவே இளம் இயக்குனர் படத்தில் நடித்தால் அது எப்போதும் சிவகார்த்திகேயன் படம் தான் என கூறப்படும். அப்படி இளம் இயக்குனர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள் புது புது ஐடியா கொண்டு வருவார்கள். அதனை தான் விஜய் செய்தார். தற்போது SK வும் அதனை பாலோ செய்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top