More
Categories: Cinema News latest news

பெரிய நடிகர் ஒன்னும் கிடையாது! ஆனால் பேய் ஓட்டம் ஓடிய திரைப்படங்கள்

பொதுவாக ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கதை எப்படி இருக்கிறதோ அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அந்த நடிகருக்காகவே முதல் நாள் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இதுவே ஒரு சாதாரண நடிகரின் படம் வெளியானால் முதல் நாள் தியேட்டரின் ஈ ஆடும். அதன் பிறகு அந்தப் படத்தின் ரிவியூவ்ஸ் எல்லாவற்றையும் பார்த்த பிறகு தான் அந்தப் படத்தை பார்க்கவே மக்கள் செல்வார்கள். அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில் அதிக வசூலை பெற்றா அதுவும் முன்னனி நடிகர் அல்லாத ஒரு நடிகர் நடித்த திரைப்படங்களை பற்றித்தா பார்க்க போகிறோம்.

லவ் டுடே : கடந்தாண்டு வெறும் 5 கோடி பட்ஜெட்டில் வெளியான படம் லவ் டுடே. இந்தப் படத்தை இயக்கி நடித்தவர் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன் கோமாளி என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்றவர். தனது இரண்டாவது படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்து வெளியான படம் தான் லவ் டுடே. அதனால் இந்தப் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. துணிந்து இறங்கியவர் ஏஜிஎஸ் நிறுவனம். யாரும் இதுவரை சொல்லாத கதை. ஆனால் தினமும் அனைவரும் எதிர்கொள்கின்ற பிரச்சினையை நகைச்சுவையாக கொடுத்து படத்தை ஒரு ஜாலி மூடிற்கு கொண்டு சென்றிருப்பார் பிரதீப். படம் வெளியாகி தாறு மாறு வெற்றி.

Advertising
Advertising

love

ராட்சசன் : இந்தப் படம் வெளியான சமயத்தில் படத்தை பற்றி யாருக்கும் தெரியாது. மேலும் அந்த சமயத்தில் விஷ்ணுவிசாலும் அந்த அளவுக்கு முன்னனி நடிகராகவும் இல்லை. ஆனால் படம் வெளியாகி ஒருவாரம் கழித்து தான் படத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே எழத் தொடங்கின. குறிப்பாக இந்தப் படம் தான் விஷ்ணு விசாலுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. திரில்லரான  கதை களத்தோடு படத்தின் ஸ்கிரீன் ப்ளே அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த படமும் குறைந்தளவே பட்ஜெட்டிலும் எடுத்தாலும் அதிக லாபம் ஈட்டிய படமாக அமைந்தது.

rat

அயோத்தி :

சசிகுமார் நடிப்பில் வெளியான இந்தப் படம் சசிகுமாராலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்தது. ஏனெனில் அதற்கு முன்பு வரை சசிகுமார் நடிப்பில் வெளியான அத்தனை படங்களுமே பெரிய ப்ளாப். இருந்தாலும் ஒரு வாரம் தியேட்டர் முழுவதும் ஈ ஆட தொடங்கியது. அதன் பிறகு படத்தை பார்த்த சிலர் படத்தை பற்றி நல்ல விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்து வந்த நிலையில் சரி போய் தான் பார்ப்போமே என பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி. சசிகுமார் நடிப்பில் இப்படி ஒரு படமா? மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்பட வைத்தது.

ayothi

 மாநகரம் : முற்றிலும் புதுமுக நடிகர்கள் , புதுமுக இயக்குனர் என துணிந்து  இந்தப் படத்தை எடுத்து படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்தனர். இந்த  ஒரு படம் தான் இன்று தமிழ் சினிமாவிற்கே பெருமையாக கருதப்படும் லோகேஷ் கிடைத்தார் என்றே சொல்லலாம். விறுவிறுப்பான கதை களத்தோடு அதுவும் சென்னையில் ஒரு மூன்று பேரின் லைவ் ஸ்டைலை அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார் லோகேஷ். இதுவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. கோடி கோடியாக இல்லாவிட்டாலும் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது அதைவிட அதிகமான வசூலை அள்ளியது.

managaram

டாடா : கவின் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஒரு சாதாரண படமாகத்தான் மக்கள் பார்த்தனர். ஆனால் படத்தை பார்க்க பார்க்க அதன் விமர்சனங்கள் நேர்மறையாக வர வர படத்தின்  மீதான ஹைப்பை தூக்கியது. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு  கவினின் அற்புதமான நடிப்புதான். யாரும் எதிர்பார்க்காத அளவில் வெற்றியடைந்தது. இதற்கு முன் கவினின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படம் கூட இதே  மாதிரியான வரவேற்பை தான் பெற்றது. இப்படி குட் நைட், போர்த்தொழில் போன்ற ஏகப்பட்ட படங்களை இந்த லிஸ்ட்டில் பார்த்துக் கொண்டே போகலாம்.

dada

Published by
Rohini

Recent Posts