புகை உயிரைக் கொல்லும். ஆனால் இவர் அந்தப் புகையையே கொல்வார்...!
சிகரெட்டைத் தூக்கிப் போட்டு அசால்ட்டாக வாயால் பிடிக்கும் ரஜினியை நாம் பல படங்களில் பார்த்து இருப்போம். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். ஒரு கையால் தூக்கிப் போட்டு வாயால் கேட்ச் பிடிப்பார் நம்ம சூப்பர்ஸ்டார்.
இந்த வித்தை எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது. அப்படியே வந்தாலும் அது சூப்பர்ஸ்டாரை மாதிரி ஸ்டைலாக இருக்காது. சில படங்களில் சிகரெட்டையோ அல்லது பீடியையோ வாயில் போட்டு ஒரு சுழட்டு சுழற்றி உள்ளே தள்ளி சவைத்து விட்டு துப்பி பின் மீண்டும் அதை அணையாமல் வெளியேக் கொண்டு வருவது இவருக்கு மட்டுமே உரித்தான ஸ்டைல்.
அதே போல் தீப்பெட்டியை இடது கையில் இருந்து தூக்கிப் போட்டு வலது கையால் கேட்ச் பிடித்தபடி இன்னொரு கையால் தீக்குச்சியைப் பற்றவைத்தவாறு சிகரெட் பிடிப்பது செம ஸ்டைல். பைக்கில் போகும்போது சிகரெட்டைப் பற்ற வைப்பது என அதகளப்படுத்துவார்.
சுருட்டு என்றாலும் அதை அண்ணாமலையில் ஸ்டைலாகப் பிடிப்பது என புகைபிடிப்பது உயிரையே கொல்லும் என்றாலும் இவர் அந்தப் புகையையே கொன்று விடுவார் போல...! அந்த அளவு அவரது ஸ்டைல் தெறிக்க விடும். அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாமா?
படையப்பா
படையப்பாவில் தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி ஸ்டைலாக சுருட்டு பிடிப்பது ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்தப்படத்தில் நீலாம்பரி கேரக்டரில் வரும் ரம்யாகிருஷ்ணன் ரஜினிக்கு செம டப் கொடுத்து நடித்து இருந்தார்.
அண்ணாமலை
பால்கரராக வந்து பட்டையைக் கிளப்பும் ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் நண்பனின் சவாலை ஏற்று அவரை விட்ட பெரிய ஆளாக மாறும்போது திரையரங்கமே ஆர்ப்பரிக்கும்.
அப்போது ஸ்டைலாக சேரில் சாய்ந்து உட்கார்ந்தவாறு அவர் நீண்ட சிகரெட் பிடிக்கும் அழகே அழகு தான். சிகரெட் பிடிக்காதவர்க்குக் கூட பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்.
பாபா
பாபா படத்தில் ரஜினிகாந்தின் ஸ்டைல் செம மாஸாக இருக்கும். இதில் ரஜினி புகைப்பிடிப்பது ரொம்பவே பேவராக இருக்கும். ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அவருக்கே உரித்தான தனி ஸ்டைல் லுக்கில் பீடி குடிப்பார்.
பில்லா
இந்தப்படத்தில் ரஜினிகாந்த் பைப் வைத்த சிகரெட் குடிப்பார். இந்தப்படம் வந்த புதிதில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். இது உங்கள் உடல் நலத்திற்கு கேடு. நீங்கள் குடிக்காதீர்கள் என்று அறிவுரை சொன்னார்.