மீண்டும் இணையும் எஸ்.எம்.எஸ் கூட்டணி... ஹீரோ மட்டும்தான்னு சொன்னது சும்மாவா?...

ஜீவா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட திரைப்படம் சிவா மனசுல சக்தி. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜீவாவும்,சந்தானமும் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல.
ராஜேஷ் இயக்கத்தில் சந்தானத்திற்கு எப்போதும் முக்கிய கதாபாத்திரம் இருக்கும். ஹீரோவின் நண்பனாக படம் முழுக்க வருவார் சந்தானம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க ஆகிய படங்களே அதற்கு சாட்சி.
ஆனால், திடீரென நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன சந்தானம் முடிவெடுத்து 10 படங்கள் நடித்துவிட்டார். எனவே, ராஜேஷ் படங்களில் அவர் நடிப்பதில்லை. அது என்னவோ சந்தானம் சென்ற பின் ராஜேஷ் பெரிய ஹிட் படங்கள் எதையும் கொடுக்கவில்லை.
தற்போது மீண்டும் சிவா மனசுல சக்தி டீம் மீண்டும் ஒன்றிணையவுள்ளது. ராஜேஷ் இயக்க, ஜீவா நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க சந்தானத்தை நச்சரித்து வருகிறாராம் ராஜேஷ்.
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் எனக்கூறி வரும் சந்தானம் சம்மதம் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...