தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளை விடவும் துணை கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை வெகு காலம் சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர்.
மனோரமா வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பல பிரபலங்கள் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்தில் துவங்கி தற்போதைய தலைமுறையினரின் காலம் வரை சினிமாவில் இருந்திருக்கின்றனர். மேலும் இவர்கள் எல்லாம் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்தவர்களாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க:சினிமாவே வேண்டாம்!.. பொன்னம்பலம் எடுத்த முடிவு.. களத்தில் இறங்கி காரியம் சாதித்த விஜயகாந்த்…
அப்படி சினிமாவில் பல காலங்களாக இருந்து வருபவர் நடிகை எஸ்.என் பார்வதி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி பல வருடங்களாக இவர் தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் வயதான பிறகே இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. அப்போது பசி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த நடிகை ஷோபாவுடன் நல்ல உறவில் இருந்தார் எஸ்.என் பார்வதி.

இதையும் படிங்க:ஹோட்டலில் நடந்த தரமான சீன்! குழந்தைனு நினைச்சா? அத விட மோசம் – பல்பு வாங்கிய எஸ்.ஜே.சூர்யா
இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஷோபா எனக்கு மகள் போன்றவள். நான்தான் அவளுக்கு உணவு கூட ஊட்டி விடுவேன் அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. ஒரு நாள் நான் ஏதோ ஒரு படப்பிடிப்பிற்கு சென்று இருந்த பொழுது ஷோபா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி எனக்கு வந்தது.
ஆனால் அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காரணத்தினால் என்னால் அந்த இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை. கடைசிவரை அவரது முகத்தை பார்க்க முடியாமலே போய்விட்டது என வருத்தத்துடன் கூறியுள்ளார் எஸ்.என் பார்வதி.
இதையும் படிங்க:விஜய் அஜித் மாதிரி ஆக நினைச்சேன்… தலையில் தட்டி அனுப்பிட்டாங்க!.. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த கொடுமை…
